ஆகஸ்ட் 13, டப்ளின் (World News): அயர்லாந்து நாட்டில், கடந்த சில வாரங்களாக இந்திய சமூகத்தினருக்கு எதிராக அதிகரித்து வரும் தாக்குதல்களின் (Racist Attack) தொடர்ச்சியாக, அயர்லாந்தில் மற்றொரு இந்தியர் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். இந்தத் தாக்குதலில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, முகத்தில் 8 தையல்கள் போடப்பட்டன. அயர்லாந்து தலைநகரான டப்ளினில் நடந்துள்ள இச்சம்பவம் குறித்த தகவலின்படி, பூங்காவிலிருந்து வீட்டிற்குத் திரும்பிச் சென்றுகொண்டிருந்த இந்திய இளைஞர் ஒருவர், சில நபர்களால் தாக்கப்பட்டார். "ஒருவர் என் வயிற்றில் எட்டி உதைத்தார். நான் அங்கிருந்து செல்ல முயன்றபோது, மேலும் இருவர் என்னைத் தாக்கினர். நான் தரையில் விழுந்த பின்னரும் அவர்கள் என்னை காலால் எட்டி உதைத்தனர்" என்று அவர் கூறினார். பலூசிஸ்தான் விடுதலைப்படையை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு.. அமெரிக்கா அதிரடி..!
இனவெறி தாக்குதல்:
தாக்குதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர், தண்ணீர் பாட்டிலால் அவரது கண்ணுக்கு மேலே அடித்ததாகவும், இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். தாக்குதலின் போது பலரும் கூடியிருந்தும் யாரும் உதவ முன்வரவில்லை எனவும், ஆனால் 2 இளைஞர்கள் மட்டும் உதவி செய்து காவல்துறையை அழைத்ததாகவும் அவர் கூறினார். இத்தாக்குதலால் மனமுடைந்த அவர், விரைவில் இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருவதாகவும் தெரிவித்தார். இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறை, உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அயர்லாந்து அதிபர் கண்டனம்:
இதேபோல், கடந்த ஜூலை 19 அன்று, அமேசான் ஊழியர் ஒருவர் டீனேஜ் கும்பலால் தாக்கப்பட்டார். தொடர்ந்து, சந்தோஷ் யாதவ் (வயது 32) என்ற இளைஞர் 6 இளைஞர்களால் தாக்கப்பட்டதில் கன்னத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மேலும், 6 வயது இந்தியச் சிறுமி ஒருவரும் அந்நாட்டை விட்டு வெளியேறும்படி மிரட்டப்பட்டார். இந்திய சமூகத்தினர் மீது அண்மையில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களை அயர்லாந்து அதிபர் மைக்கேல் டி.ஹிக்கின்ஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார்.