ஜூலை 26, சென்னை (Cinema News): தமிழ் சினிமாவில் அதிரடி நாயகனாகவும், கோடிக்கணக்கான மக்களால் கேப்டன் எனவும் அன்போடு அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். இவரின் மறைவு இன்று வரை தமிழக மக்களாலும், திரையுலகினராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயங்களில் ஒன்றாகிவிட்டது. மறைந்த அரசியல் தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் ஆகஸ்ட் 25 அன்று கொண்டாடப்படுகிறது. Elakkiya Suicide Attempt: "என் சாவுக்கு காரணம் இவர் தான்" - இன்ஸ்டா பிரபலம் இலக்கியா தற்கொலை முயற்சி.. காரணம் என்ன?.!
கேப்டன் பிரபாகரன் மறுவெளியீடு :
இதனை முன்னிட்டு அவரது திரையுலக பயணத்தின் மைல்கல் திரைப்படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மீண்டும் புதுப்பொலிவுடன் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இப்படம் மறுவெளியீடு செய்யப்படுகிறது. இன்றைய தலைமுறை ரசிகர்களும் ரசிக்கும் வகையில் நவீன 4K தொழில்நுட்பம் கொண்டு டிஜிட்டல் முறையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜயகாந்தின் ஹிட் படம் :
கடந்த 1991 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு நாளில் ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் வெளியான கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி கண்டது. இப்படத்திற்கு பின்னரே விஜயகாந்த் மக்கள் மத்தியில் கேப்டன் எனவும் அறியப்பட்டார். இந்த கேப்டன் பொறுப்பு வாழ்நாள் முழுவதும் நீடித்திருந்தது. இளையராஜாவின் இசையில் விஜயகாந்துடன் சரத்குமார், ரூபினி, ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான் உட்பட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர்.