Amol Kale Dies: மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் கேல் மறைவு.. இந்தியா-பாகிஸ்தான் போட்டியைப் பார்க்கச் சென்ற போது நடந்த துயரம்..!
இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் பார்வையாளராக கலந்துகொண்ட மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் கேல் மாரடைப்பு காரணமாக அமெரிக்காவில் காலமானார்.
ஜூன் 10, நியூயார்க் (Sports News): ஐசிசி டி20 உலகக் கோப்பை (ICC T20 World Cup 2024) தொடரில் நேற்று இரவு நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் (IND Vs PAK) அணிகள் மோதின. அதில் பாகிஸ்தான் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாத்தியமில்லாத வெற்றியை இந்திய அணி பெற்றது. இந்த போட்டியில் பார்வையாளராக கலந்துகொண்ட மும்பை கிரிக்கெட் சங்கத் தலைவர் அமோல் கேல் (Mumbai Cricket Association President Passes Away) மாரடைப்பு காரணமாக அமெரிக்காவில் காலமானார். ISRO's Aditya-L1 Captures Solar Flares: சூரிய புயலின் புகைப்படம்.. ஆதித்யா எல்-1 விண்கலத்தின் அப்டேட்..!
இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த புகழ்பெற்ற மும்பை கிரிக்கெட் சங்க தேர்தலில், பவார்-ஷேலர் குழுவில் இருந்து அமோல் காலே தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சந்தீப் பாட்டீலை, அமோல் காலே தோற்கடித்தார். தொடர்ந்து எம்சிஏ தலைவராக பணியாற்றிய அமோல் காலே, ஆந்திராவில் உள்ள திருமலா தேவஸ்தானத்தின் அறங்காவலராகவும் இருந்தார். மேலும் ரியல் எஸ்டேட், மருத்துவம், தளவாடங்கள், ஊடக மேலாண்மை, பாதுகாப்பு, எரிசக்தி துறைகளிலும் பணிபுரிந்து வந்தார். அதுமட்டுமின்றி ஜே.கே. சொல்யூஷன்ஸுடன் சேர்ந்து, அர்பிட் எண்டர்பிரைசஸ் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.