![](https://static.latestly.com/File-upload-v3/o/p/4NqciJt1B8gIsZFwY23kB10uvfvtKQdVvjUutMrKYPj3e6kq5VzARfRWM---ndIi/n/bmd8qrbo34g7/b/File-upload-v3/o/upload-test-dev/uploads/1718020745Aditya%2520L1-380x214.jpg)
ஜூன் 10, புதுடெல்லி (New Delhi): இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பூமியில் இருந்து 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனை ஆய்வு செய்ய 2008 ஜனவரியில் ‘ஆதித்யா–1’ எனும் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம் ‘ஆதித்யா எல்–1’ (Aditya L-1 ) ஆக மாற்றம் அடைந்தது. தொடர்ந்து வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் (IIA), வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் பல்கலைக்கழக மையம் (IUCAA), இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் (IISER) ஆகிய மையங்கள் பங்களிப்புடன் ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் செப்டம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த விண்கலம் சுமார் 4 மாதகாலமாக (127 நாட்கள்) சூரியனை நோக்கி சீராக பயணித்து. இந்நிலையில் ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்தது. புவிக்கும் சூரியனுக்கும் இடையில் சம புவிஈர்ப்பு விசையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சூரியனை பூமி சுற்றும்போது, அதற்கு ஏற்ப சூரியனை ஆதித்யா விண்கலமும் பின் தொடரும். எல்-1 என்பது பூமிக்கும், சூரியனுக்கும் இடையிலான ஒரு குறிப்பிட்ட புள்ளியை குறிக்கும் லாக்ரேஞ்ச் பாயிண்ட் என்ற இடமாகும். எல்-1 என்ற இடத்திலிருந்து எவ்வித குறிக்கீடும் இன்றி சூரியனை ஆராய முடியும். மேலும் 5 ஆண்டுகளுக்கு ஆய்வுப்பணிகளை ஆதித்யா மேற்கொள்ள உள்ளது. TN Weather Report: தமிழகத்தின் இன்றைய வானிலை நிலவரம்.. மீனவர்களுக்கான எச்சரிக்கை.. விபரம் உள்ளே..!
இந்நிலையில் மே மாதம் சூரியனின் இயங்குநிலை எப்படி மாற்றம் அடைந்தது என்பதை ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்து பூமிக்கு அனுப்பியது. இஸ்ரோவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படங்களை வெளியாகி வைரலாகப் பரவி வருகின்றன. இந்தப் புகைப்படங்கள் சூரியனின் ஆற்றல் மிகுந்த செயல்பாடுகளைக் காட்டுவதாகவும் கூறியுள்ளது.