Team India Head Coach: "மோடி, அமித்சாவின் அடுத்த இன்னிங்ஸ்.." இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தார்களா?.!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்துள்ளது.

BCCI (Photo Credit: @BCCI X)

மே 28, சென்னை (Sports News): இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்பட்டு வருகிறார். அவரின் பதவிக்காலம் ஆனது வரும் டி20 உலக கோப்பை போட்டியுடன் முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்த பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்தப் பணிக்காக பிசிசியை மே 13ஆம் தேதி முதல் கூகுள் பார்மில் பயிற்சியாளர்களுக்காண விண்ணப்பங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் பயிற்சியாளர் பதவிக்கான (Head Coach) விண்ணப்பங்கள் பெரும் கடைசி நாள் நேற்று முடிவடைந்துள்ளது. Actor Ajith Kumar's Recent Clicks: "வண்டியில் டாப் கியர்.. வயதில் ரிவர்ஸ் கியர்.." அஜித் குமாரின் கலக்கலான புதிய லுக்..!

இதில் தோனி, சச்சின் டெண்டுல்கர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா என்ற பெயர்களில் போலி விண்ணப்பங்களுடன் கிட்டத்தட்ட 3000 விண்ணப்பங்களை பிசிசிஐ (BCCI) பெற்றுள்ளது. இதன் காரணமாக இதில் உண்மையாகவே முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளார்களா? என்பதை கண்டறிவதில் சிக்கல் எழுந்துள்ளது.