IPL 2024: "யார் கோப்பைக்கு வலதுபக்கம் நின்னு போஸ் கொடுத்தாலும் கப்.." வைரலாகும் ஐபிஎல் போட்டோஷூட் புகைப்படங்கள்..!

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் 2019 முதல் கோப்பைக்கு வலதுபக்கம் நின்னு போஸ் கொடுத்த கேப்டனே கோப்பையை வென்றிருக்கிறார்.

right of the trophy (Photo Credit: Facebook)

மே 27, சென்னை (Sports News): கோலகலமான கொண்டாட்டங்களுடன் சென்னையில் கடந்த மாதம் தொடங்கிய ஐபிஎல் 2024 (IPL 2024) கிரிக்கெட் போட்டி, நேற்றுடன் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நிறைவு பெற்றது. புள்ளிப்பட்டியலின்படி இறுதிப்போட்டிக்கு நேரடியாக தேர்வான கொல்கத்தா அணியும், தகுச்சுற்றில் முன்னேறி இறுதிப்போட்டியில் களம்கண்ட ஹைதராபாத் அணியும் (KKR Vs SRH IPL 2024 Final) நேற்று மோதிக் கொண்டன. அதில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 114 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 57 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் சேர்த்து 3வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. Shilpa Gautam Murder Case: ஷில்பா கௌதம் கொலை வழக்கு.. கைது செய்யப்பட்ட ஐஆர்எஸ் அதிகாரி..!

ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு முன்பாக இன்று கேகேஆர் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் இருவரும் போட்டோஷூட்டில் பங்கேற்றனர். சேப்பாக்கம் மைதானத்திற்கு வெளியில் அண்ணா பெவிலியன் முன்பாக, மெரினா கடற்கரை, படகில் அமர்ந்தவாறு என்று ஏராளமான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்களில் ஸ்ரேயாஸ் ஐயர் வலது பக்கமும், பேட் கம்மின்ஸ் இடது பக்கமும் போஸ் கொடுத்துள்ளனர். இதில் ஷ்ரேயாஸ் ஐயர் முதல் முறையாக ஐபிஎல் 2024 டிராபியை தனது கையால் தூக்கினார். இதனை வைத்து ரசிகர்கள் புதிய தியரி ஒன்றை உருவாக்கி வருகின்றனர். 2019 முதல் வலப்பக்கம் நின்ற கேப்டனே கோப்பையை வென்றிருக்கிறார். அது தொடர்பான புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.