India vs South Africa Test (Photo Credit : @BCCI X)

நவம்பர் 11, தென்னாபிரிக்கா (Sports News): ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய தேசிய கிரிக்கெட் அணி (India National Cricket Team), ஆஸ்திரேலியா தேசிய கிரிக்கெட் அணியுடன் ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியது. ஒரு நாள் போட்டி கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றிய இருந்த நிலையில், டி20 கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது. தொடர்ந்து இந்த போட்டிக்கு பின்னர் இந்திய தேசிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்கா தேசிய கிரிக்கெட் அணியுடன் (South Africa National Cricket Team Vs India National Cricket Team) ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றியாளருக்கு எதிரான போட்டி என்பதால் இந்தியாவில் நடைபெறும் இந்த போட்டிகள் விறுவிறுப்பு பெற்றுள்ளன. அதன்படி இந்தியாவுக்கு வரும் (IND Vs SA Cricket 2025) தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியுடன் இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள், 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த போட்டிகள் நவம்பர் 14ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. டெஸ்ட் போட்டி காலை 9:30 மணி அளவில் தொடங்குகிறது. இது தொடர்பான அட்டவணையை பின்வருமாறும் விரிவாக பார்க்க., IND Vs AUS 5th T20I: இந்தியா Vs ஆஸ்திரேலியா கிரிக்கெட்.. டி20 தொடரை கைப்பற்றியது இந்தியா.. கருணை காட்டிய வருண பகவான்.!

இந்தியா Vs தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டி முழு அட்டவணை (India vs South Africa Schedule):

  • முதல் டெஸ்ட் போட்டி - நவம்பர் 14 முதல் 18 வரை

    இடம்: கொல்கத்தா

  • இரண்டாவது டெஸ்ட் போட்டி - நவம்பர் 22 முதல் 26 வரை

    இடம்: கௌகாத்தி

  • முதல் ஒருநாள் போட்டி - நவம்பர் 30

    இடம்: ராஞ்சி

  • இரண்டாவது ஒருநாள் போட்டி - டிசம்பர் 03

    இடம்: ராய்ப்பூர்

  • மூன்றாவது ஒருநாள் போட்டி - டிசம்பர் 06

    இடம்: விசாகப்பட்டினம்

  • முதல் டி20 போட்டி - டிசம்பர் 09

    இடம்: கட்டாக்

  • இரண்டாவது டி20 போட்டி - டிசம்பர் 11

    இடம்: முல்லன்பூர்

  • மூன்றாவது டி20 போட்டி - டிசம்பர் 14

    இடம்: தர்மசாலா

  • நான்காவது டி20 போட்டி - டிசம்பர் 17

    இடம்: லக்னோ

  • ஐந்தாவது டி20 போட்டி - டிசம்பர் 19

    இடம்: அகமதாபாத்

இந்தியா எதிர் தென்னாப்பிரிக்கா (India Cricket Vs South Africa Cricket):

இந்த போட்டிகளை ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் (Star Sports) தமிழ் தொலைக்காட்சியில் நேரலையில் பார்க்கலாம். இந்தியாவில் நடக்கும் போட்டி என்பதால் ரசிகர்கள் முன்கூட்டியே மைதானங்களில் சென்று போட்டிகளை பார்க்கவும் ஆர்வமாக இருக்கின்றனர். இந்த போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை தக்கவைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் தென்னாபிரிக்க அணியும் இந்திய அணிக்கு வலுவான எதிரணியாக இருக்கும் என்பதால் ஆட்டம் பெருவாரியாக எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதும் போட்டி எப்போது (India Vs South Africa Cricket Match)?

போட்டி அணிகள்: இந்தியா Vs தென்னாப்பிரிக்கா (IND Vs SA)

போட்டி நாள்: முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 14, 2025

போட்டி நேரம்: காலை 09:30 இந்திய நேரப்படி

போட்டி இடம்: ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானம், கொல்கத்தா

போட்டி நேரலை: ஜியோ ஹாட்ஸ்டார் (Jio Hotstar) ஓடிடி, சோனி ஸ்போர்ட்ஸ் (Star Sports) டிவி