Trent Boult Retirement: நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் போல்ட் ஓய்வு.. ரசிகர்கள் சோகம்..!
நியூசிலாந்து அணியின் முதன்மையான வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான டிரெண்ட் போல்ட், சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.
ஜூன் 19, செயிண்ட் லூசியா (Sports News): பிரபல வேகப்பந்து வீச்சாளரான டிரென்ட் போல்ட் (Trent Boult), ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 போட்டியுடன், நியூசிலாந்து அணிக்காக டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடுவதில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார். இந்நிலையில், நியூசிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாததால், நேற்றைய பப்புவா நியூ கினியா அணிக்கு எதிரான போட்டி அவருக்கு கடைசி போட்டியாக அமைந்தது. Canada's Tribute to Khalistani Terrorist: காலிஸ்தான் பயங்கரவாதிக்கு கனடா நாடாளுமன்றத்தில் துக்கம் அனுசரிப்பு.. கேள்விக்குறியாகும் கனடா - இந்தியா உறவுகள்..!
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற மகத்தான வீரர்களுக்கு சவாலை கொடுத்த டிரென்ட் போல்ட், கிரிக்கெட்டில் மிகச்சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளராக போற்றப்படுகிறார். அந்த வகையில் 78 டெஸ்ட், 114 ஒருநாள், 61 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 317, 211, 83 என மொத்தம் 611 விக்கெட்டுகளை எடுத்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.