Ben Stokes Reaction After Out: 'என்னய்யா பொசுக்குன்னு சாச்சுப்புட்ட' - பும்ராவிடம் போல்ட் அவுட்டாகி புன்முறுவலுடன் வெளியேறிய பென் ஸ்டோக்ஸ்.! வைரல் வீடியோ இதோ.!
தனது இலக்கான 100 ரன்களை எப்படியாவது எட்டிவிடலாம் என்ற முனைப்புடன் நின்று ஆடிய பென் கனவு பும்ராவின் பந்தால் சிதறிப்போனது.
ஜனவரி 25, ஹைதராபாத் (Cricket News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி (IND Vs ENG Test Series), ஐந்து டெஸ்ட் தொடர்களை இந்தியாவுக்கு எதிராக விளையாடுகிறது. இந்த போட்டியின் முதல் ஆட்டம் இன்று தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில் இருக்கும் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து தொடங்கியது. காலை 9 மணிக்கு தொடங்கிய ஆட்டம் தற்போது வரை நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இங்கிலாந்து அணி 246 ரன்கள் குவிப்பு: இதனையடுத்து இங்கிலாந்தின் சார்பாக களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி 64.3 ஓவரில் 246 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகினர். இதில், அதிகபட்சமாக க்ராவ்லே 40 பந்துகளில் 20 ரன்னும், பென் பக்கட் 39 பந்துகளில் 35 ரன்னும், ஜோ ரூட் 60 பந்துகளில் 29 ரன்னும், ஜானி 58 பந்துகளில் 37 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 88 பந்துகளில் 70 ரன்னும், டாம் 24 பந்துகளில் 23 ரன்னும் எடுத்திருந்தனர். Turkish Military Plane Emergency Landing Video: நடுவானில் விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; அவசரமாக நெடுஞ்சாலையில் தரையிறங்கிய இராணுவ விமானம்.!
பும்ராவிடம் விக்கெட்டை பறிகொடுத்த பென்: இறுதிவரை தாக்குப்பிடித்த பென்ஸ் ஸ்டோக்ஸ் (Ben Stokes), எப்படியாவது சதம் அடித்து விட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதனை நோக்கி அவரது நகர்வுகள் இருந்த நிலையில், 88 பந்துகளில் 70 ரன்கள் வரை குவித்தார். இறுதியாக பும்ராவின் பந்துவீச்சில் அவர் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். பும்ரா (Jasprit Bumrah) தனது கைகளை சுழற்றி பந்துகளை வீசியபோது, பென் ஸ்டாக்கின் பார்வையிலிருந்து பந்து விலகி நேரடியாக ஸ்டெம்பில் பட்டு அவர் போல்ட் அவுட் ஆகினார்.
பென் முகபாவனை வைரல்: அப்போது விக்கெட்டை அவர் ஏற்றுக் கொள்ள மனம் இல்லாமல், சிரித்தபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதுகுறித்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போது இந்திய அணி களத்தில் இருக்கும் நிலையில், 16 ஓவர்கள் முடிவில் 87 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மாவின் விக்கெட் மட்டுமே பறிபோய் உள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் முடிவிலேயே இந்திய அணி நல்ல ரன் குவிப்பில் ஈடுபட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. களத்தில் ஜெய்ஸ்வாலும், சுப்னம்கில்லும் நின்று ஆடி வருகின்றனர்.
வைரல் வீடியோ உங்களின் பார்வைக்கு: