Turkey Plane Emergency Landing (Photo Credit: @BNONews X)

ஜனவரி 25, கெய்சரி (World News): துருக்கி விமானப்படைக்கு சொந்தமான சி-160 இராணுவ விமானத்தில் இன்று இராணுவ அதிகாரிகள் பயணம் செய்துகொண்டு இருந்தனர். அச்சமயம் நடுவானில் விமானத்தில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் விமானிகளால் மேற்படி விமானத்தை இயக்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, நிலைமையை உணர்ந்த அதிகாரிகள், விமான கட்டுப்பாட்டு அறைக்கு (Military Plane Emergency Landing) தொடர்புகொண்டு தகவல் தெரிவித்து, தலைநகர் கெய்சரியில் அவசர கதியில் விமானத்தை விரைந்து தரையிறக்கினர். Legendary Mary Kom Opens Up: குத்துச்சண்டையில் இருந்து ஓய்வா?.. விளக்கம் அளித்த மேரி கோம்..! 

நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏற்படவில்லை: இதனால் விமானம் லேசான விபத்தை சந்தித்தது. ஆயினும் விமானத்தில் பயணித்தவர்களுக்கு எவ்வித காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என்று துருக்கி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை தொடர்ந்து, விமானம் விரைந்து தரையிறங்கியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.