NZ Vs ENG 1st Test: ஹாரி புரூக் - ஒல்லி போப் இணை அபாரம்.. அசாத்தியமான கேட்ச் பிடித்து அசத்திய கிளென் பிலிப்ஸ்..!
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்களை இழந்து 319 ரன்கள் அடித்துள்ளது.
நவம்பர் 29, கிறைஸ்ட்சர்ச் (Sports News): நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் (NZ Vs ENG 1st Test, Day 2) அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சர்ச் (Christchurch) நகரில் நேற்று (நவம்பர் 28) தொடங்கியது. இந்திய நேரப்படி அதிகாலை 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியை சோனி ஸ்போர்ட்ஸ் டென் 5 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. NZ Vs ENG 1st Test: கேன் வில்லியம்சன் அபார ஆட்டம்.. முதல் நாளில் நியூசிலாந்து அணி 319 ரன்கள் குவிப்பு..!
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 83 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 319 ரன்கள் அடித்தது. முன்னாள் கேப்டன் வில்லியம்சன் (Kane Williamson) 93 ரன்களில் விக்கெட்டை இழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். நியூசிலாந்து அணியில் கிளென் பிலிப்ஸ் (Glenn Phillips) 41 ரன்னிலும், டிம் சவுதி 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்நிலையில், இன்று 2ஆம் நாள் ஆட்டம் தொடங்கியது. 91 ஓவர்களில் நியூசிலாந்து அணி 348 ரன்கள் அடித்து ஆல் அவுட் ஆனது. கிளென் பிலிப்ஸ் 58 ரன்களுடன் நாட் அவுட்டில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் சோயப் பஷீர் (Shoaib Bashir) மற்றும் பிரைடன் கார்ஸ் (Brydon Carse) தலா 4, கஸ் அட்கின்சன் 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 71 ரன்னுக்கு 4 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அப்போது, ஜோடி சேர்ந்த ஹாரி புரூக்-ஒல்லி போப் இணை நிதானமாக விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஒல்லி போப் 77 ரன்னில் விளையாடிக்கொண்டிருந்த நிலையில், டிம் சவுதி பந்தை அடித்தபோது கிளென் பிலிப்ஸின் அபாரமான கேட்ச்சினால் அவுட்டானார். இறுதியில், இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் 74 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 319 ரன்கள் சேர்த்துள்ளது. அதிகபட்சமாக ஹரி புரூக் (Harry Brook) 132, பென் ஸ்டோக்ஸ் 37 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இருப்பினும், இங்கிலாந்து அணி 29 பின்தங்கிய நிலையில், நாளை விளையாடவுள்ளது.
அபாரமாக கேட்ச் பிடித்து அசத்திய கிளென் பிலிப்ஸ்: