Sachin Meets Tendulkar: ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சச்சின்; டீ-சர்ட் போட்ட ரசிகருக்காக நெகிழ்ச்சி செயல்.!
சாலை பயணத்தின்போது சச்சின் டெண்டுல்கர், தனது பெயரிலான டீ-சர்ட் அணிந்த ரசிகருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
பிப்ரவரி 02, மும்பை (Mumbai): இந்திய கிரிக்கெட் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் & நட்சத்திர ஆட்டக்காரர் என பல பெருமைகளுக்கு சொந்தக்காரர் சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar). தோனிக்கு முன்பு இந்திய அணியில் இடம்பெற்று பல இமாலய அளவிலான சரித்திர சாதனைகளை உருவாக்கியவர்களில் சச்சின் சர்வதேச அளவில் கவனிக்கத்தக்கவர். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 18,000 மற்றும் 15,000 ரன்களை கடந்த முதல் வீரராகவும் இவர் விளங்கினார். கடந்த 2012 முதல் 2018 வரையில் இவர் ராஜ்யசபா எம்.பி ஆகவும் பணியாற்றி வந்துள்ளார். 11 வயதில் கிரிக்கெட் மீது ஆர்வம் ஏற்பட்டு, 16 வயதில் சர்வதேச போட்டிகளில் கலந்துகொண்ட சச்சின், 24 ஆண்டுகள் கிரிக்கெட்டுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து பல சாதனைகளை படைத்தார்.
பல பெருமைகளுக்கு சொந்தக்காரர்: 2002 ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி, 2011 உலகக்கோப்பை ஆகியவற்றின் வெற்றியில் சச்சினின் பங்கு அளப்பரியது. சச்சினின் கிரிக்கெட் வாழ்க்கையை கௌரவப்படுத்தும் பொருட்டு அர்ஜுனா, கேல் ரத்னா, பத்மஸ்ரீ, பத்ம விபூஷண், பாரத ரத்னா உட்பட பல விருதுகள் வழங்கப்பட்டன. கடந்த 2010ம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளிலும், 2013ல் ஒட்டுமொத்த சர்வதேச போட்டிகளில் இருந்தும் அவர் விடுப்பு பெற்று, தற்போது பல சச்சின்களை உருவாக்கி வருகிறார். Chennai to Hong Kong: ஹாங்காங் பயணிகளுக்கு உற்சாக செய்தி: சென்னையில் இருந்து நேரடி விமான சேவை.. விபரம் இதோ.!
ரசிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சச்சின்: மொத்தமாக 664 சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள சச்சின் தெண்டுல்கர், 34,357 ரன்களை குவித்து இருக்கிறார். பிற போட்டிகளை கணக்கில் எடுத்துக்கொண்டால் ரன்கள் மற்றும் போட்டிகளின் எண்ணிக்கை இன்னும் இரண்டு மடங்கு அதிகரிக்கும். எளிமையான குணம் கொண்ட சச்சின், அவ்வப்போது பொதுவெளிகளில் தனது மனதின் குரலை வெளிப்படுத்துவது வழக்கம். இந்நிலையில், சச்சின் தெண்டுல்கர் காரில் பயணம் செய்யும்போது, அவரின் ரசிகர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சச்சின் டீ-சர்ட் அணிந்து பயணம் செய்தார். இதனைக்கண்ட சச்சின் ரசிகரை நிறுத்தி இன்ப அதிர்ச்சி கொடுத்து கலந்துரையாடினார். இதனை சற்றும் எதிர்பாராத ரசிகர், பிரம்மிப்பில் வியந்தபடி தனது நாயகனுடன் உரையாடி மகிழ்ந்தபடி அங்கிருந்து சென்றார்.
சச்சினை சந்தித்த டெண்டுல்கர்: இதுகுறித்த வீடியோவை தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அந்த பதிவில், "சச்சின் டெண்டுல்கரை சந்தித்தார். என் மீது இவ்வுளவு அன்பை வழங்குவதை பார்க்கும்போது, எனது இதயம் மகிழ்ச்சியில் நிரம்பி வழிகிறது. எதிர்பாராத இடங்களிலும் இருந்து வரும் மக்களின் அன்பு மற்றும் ஆதரவே வாழ்க்கையை சிறப்பானதாக்கி இருக்கிறது" என கூறியுள்ளார்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)