Cathay Pacific Airlines A330 (Photo Credit: www.cathaypacific.com)

பிப்ரவரி 02, சென்னை (Chennai): சீனாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாகவும், சர்வதேச அளவில் பல சுற்றுலாப் பயணிகளை கவரும் நகரமாகவும் இருப்பது ஹாங்காங் (Hong Kong). இந்நகருக்கு இந்தியாவில் இருந்தும் பலரும் சுற்றுலா சென்று வருவார்கள். குறிப்பாக தமிழகத்தில் இருந்து ஹாங்காங் செல்லும் பயணிகள் ஏராளம். அதேபோல பல திரைப்படங்களும் ஹாங்காங்கில் படம் பிடிக்கப்பட்டு இருக்கின்றது.

கொரோனாவால் நிறுத்தப்பட்ட நேரடி விமான சேவை: சீனாவின் ஆட்சிக்குட்பட்ட ஹாங்காங், சிறப்பு அதிகாரம் பெற்ற மாகாணமும் ஆகும். உலகையே ஆட்டி வைத்த கொரோனா பரவலின் போது, சென்னையில் இருந்து நேரடியாக ஹாங்காங்-க்கு வழங்கப்பட்டு வந்த விமான சேவையானது நிறுத்தப்பட்டது. கொரோனா பரவலுக்கு முன்னதாக சென்னை - ஹாங்காங் இடையே கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் விமான சேவையானது வழங்கப்பட்டு வந்தது. Kenya Gas Explosion: கியாஸ் நிலையத்தில் பயங்கர வெடிவிபத்து; 165 பேர் படுகாயம்.! 

மீண்டும் தொடங்கிய விமான சேவை: நேரடி விமான சேவை கொரோனா காரணமாக அதிரடியாக நிறுத்தப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் ஹாங்காங்கு-க்கு நேரடி விமான சேவை சென்னையில் இருந்து தொடங்க உள்ளது. கேத்தே ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் மார்ச் 2020க்கு பின்னர் தற்போது பிப்ரவரி 2024-இல் புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு என மூன்று நாட்களுக்கு சென்னை - ஹாங்காங் நேரடி விமான சேவை வழங்கப்பட உள்ளது. பயணிகளிடம் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, விரைவில் தினசரி விமான சேவையும் இயக்கப்படும் என்று விமான நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

சென்னை - ஹாங்காங் பயணம்: தமிழகத்திலிருந்து ஹாங்காங் செல்ல நினைப்போருக்கு, இது ஒரு சிறப்பான அறிவிப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் இருந்து ஹாங்காங் நோக்கி பயணிக்க 2319 மைல்கள் தூரம் கடந்து செல்ல வேண்டும். நேரடி விமான சேவை என்றால் ஐந்தரை மணிநேரம் முதல் 6 மணிநேரத்திற்குள் ஹாங்காங் சென்றடையலாம்.