ICC World Cup Final 2023 Ceremony: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கிரிக்கெட் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. வெளியான அட்டகாசமான தகவல்.. இதையெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க.!
அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் இறுதி ஆட்டம், இந்தியர்களால் மறக்க இயலாத வண்ணம் கொண்டாட்டங்களால் நிறைந்திருக்கும்.
நவம்பர் 18, சென்னை (Sports News): 50 ஓவர்கள் (One Day Innings) கொண்ட, 13வது ஐசிசி உலகக்கோப்பை (ICC Cricket World Cup 2023) கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, வங்கதேசம், பாகிஸ்தான், நெதர்லாந்து உட்பட 10 அணிகள் மோதிக்கொள்ளும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர், இந்தியாவால் முதல் முறையாக தனிநாடாக முன்னின்று நடத்தப்பட்டது.
அக்.05ம் தேதி தொடங்கிய ஆட்டம், தொடர்ச்சியாக 47 ஆட்டங்களை கடந்து இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்தடுத்து 40 நாட்கள் பல அணிகள் பலப்பரீட்சை நடத்தி, இந்தியா - ஆஸ்திரேலியா (India Vs Australia) அணிகள் புள்ளிப்பட்டியலின் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறி வெற்றியடைந்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
குஜராத் (Gujarat) மாநிலத்தில் உள்ள அகமதாபாத் (Ahmedabad) மைதானத்தில் வைத்து உலகக்கோப்பை 2023 தொடர் இங்கிலாந்து - நியூசிலாந்து (ENG Vs NZ) அணிகளுக்கு இடையேயான ஆட்டத்துடன் தொடங்கிய நிலையில், இறுதிப்போட்டி மீண்டும் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் (Narendra Modi Cricket Stadium) மைதானத்தில் வைத்து இந்தியா - ஆஸ்திரேலியா (India Vs Australia) அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. Salman Confidence Team India Won CWC Championship 2023: இந்திய அணி உலகக்கோப்பை 2023 இறுதிப்போட்டியில் நிச்சயம் வெற்றிபெறும் - சல்மான் கான் நம்பிக்கை.!
தனக்கு எதிரான 9 போட்டிகளில் 9-ஐயும் ரோஹித் சர்மா (Rohit Sharma) தலைமையிலான இந்திய அணி (Team India) திறம்பட விளையாடி வெற்றிகொண்டது. பேட் கம்மின்ஸ் (Pat Cummins) தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் (Team Australia) 9 போட்டிகளில் 7ல் வெற்றி அடைந்துள்ளது. கிரிக்கெட் உலகக்கோப்பை வரலாற்றில் 2 உலகக்கோப்பை பெற்றுள்ள இந்திய அணியும், 5 கோப்பைகளை பெற்றுள்ள ஆஸ்திரேலிய அணியும் இந்தியாவில் தற்போது பலபரீட்சை நடத்துகிறது.
இதனால் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம், இந்தியாவில் மிகப்பெரிய உச்சகட்ட எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது. விடுமுறை நாளான நாளை பலரும் போட்டியை ஸ்டார் போர்ட்ஸ் தொலைக்காட்சி (Star Sports) மற்றும் ஹாட்ஸ்டார் (Hotstar) செயலி வழியே காண ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, மைதானத்திற்கு நேரில் வரும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இறுதிப்போட்டியின்போது, இந்திய நேரப்படி மதியம் 12:30 மணிமுதல் கொண்டாட்டங்கள் தொடங்குகின்றன. பின் இடையில் மாலை 05:30 மணியளவில் இடைவெளி நிகழ்ச்சி கொண்டாட்டங்களும் நடக்கின்றன. போட்டி மதியம் 02:00 மணிக்கு டாஸ் போடப்பட்டு, 02:30 க்கு தொடங்கும். Delhi Air Pollution: காலையிலேயே மக்களை வாட்டி வதைக்கும் காற்றுமாசு: மோசமான காற்றை சுவாசிக்கும் டெல்லி மக்கள்.!
மதியம் 10 நிமிடம் விமானப்படை துணை விங் கமாண்டர் சித்தேஷ் கார்த்திக் தலைமையிலான குழு வானில் (Air Show) சாகசம் செய்கிறது. இந்திய விமானப்படை சார்பில் பார்வையாளர்களை வரவேற்கவும், போட்டியாளர்களை உற்சாகப்படுத்தவும் விமான சாகசங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதனைத்தொடர்ந்து, ஆட்டத்தின் தொடக்க விழாக்கள் களைகட்டும். கிரிக்கெட் வரலாற்றில் முக்கிய புள்ளிகளாக இந்திய சரித்திரத்தில் இடம்பெற்ற எம்.எஸ் தோனி (M.S Dhoni), கபில் தேவ் உட்பட பலரும் நேரில் வந்து அணிகளை உற்சாகப்படுத்தவுள்ளனர். இவர்கள் கடந்த காலங்களில் கொண்ட வெற்றியின் தொகுப்பு வீடியோவும் திரையிடப்படும். இசையமைப்பாளர் பிரீத்தமின் சார்பில் நேரடி பாடல்கள், 500 நடன கலைஞர்களுடன் ஆட்டம் என பாலிவுட் பாடல்களுக்கு கொண்டாட்டங்கள் உச்சகட்டத்தை நோக்கி நகர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இறுதியாக வெற்றிபெறும் அணியையும், ரன்னராக வரும் அணியையும் உற்சாகப்படுத்த 1200 டிரோன்கள் கொண்டு ஒளிநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நேரில் கண்டிடாத பல கலைநிகழ்ச்சிகளும் கொண்டாட்டங்களில் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் இது மறக்க இயலாத போட்டியாக இருக்கும் என உச்சகட்டமாக எதிர்பார்க்கப்படுகிறது.