நவம்பர் 18, மும்பை (Social Viral): மணீஷ் ஷர்மா (Director Maneesh Varma) இயக்கத்தில், யாஷ் ராஜ் பிலிம்ஸ் (Yash Raj Films) தயாரிப்பில், ப்ரீதம் இசையில், ரூ.300 கோடி பொருட்செலவில் அட்டகாசமான ஆக்சன் காட்சிகளுடன் உருவாகி, ஹிந்தி, தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் வெளியான திரைப்படம் டைகர் 3 (Tiger 3).

கடந்த 12 நவம்பர் அன்று உலகளவில் வெளியான திரைப்படம், 6 நாட்களில் ரூ.300 கோடி வசூலை நெருங்கி இருக்கிறது. படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள காரணத்தால், வசூல் வரும் நாட்களில் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. Delhi Air Pollution: காலையிலேயே மக்களை வாட்டி வதைக்கும் காற்றுமாசு: மோசமான காற்றை சுவாசிக்கும் டெல்லி மக்கள்.! 

இப்படத்தில் சல்மான் கான் (Salman Khan), கத்ரினா கைப் (Katrina Kaif), இம்ரான் ஹாஷ்மி, ரேவதி, ரிதி தோக்ரா, விஷால் ஜெத்சவா, குமுந்த் மிஸ்ரா, ரன்வீர் ஷோரேவ், ஆனந்த் விதார், வரீந்தர் சிங் உட்பட பலரும் நடித்திருக்கின்றனர். ஷாருக்கான் (Shah Rukh Khan) சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், படத்தின் வெற்றிவிழா மும்பையில் நடைபெற்றது.

அப்போது பேசிய நடிகர் சல்மான் கான், டைகர் 3 படம் வெற்றியடைந்துள்ளது. இந்திய அணியும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி அடையும். நாங்கள் உலகக்கோப்பை போட்டியின்போது டைகர் 3 படத்துடன் வந்து வெற்றி அடைந்தோம். இந்தியாவும் வெற்றி அடையும் என கூறினார்.

உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, நாளை (நவ.19) அன்று குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இறுதிப்போட்டிக்கு சீக்கிய பிரிவினைவாத பயங்கரவாதிகள் குழுவிடம் இருந்து அச்சுறுத்தலும் வந்துள்ளாதால், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.