ICC CWC 2023 Champion Australia: உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி: இறுதிவரை பதைபதைப்பை தந்த ஆட்டம்., சொந்தமண்ணில் இந்தியா படுதோல்வி.! முழு விபரம் இதோ.!
ரசிகர்களின் மனதை பதைபதைக்க வைத்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடராக அமைந்த 2023 தொடரில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக்கொண்டு, இறுதியாக உலகக்கோப்பையை ஆஸ்திரேலியா கைப்பற்றியது.
நவம்பர் 19, அகமதாபாத் (Sports News): 13வது ஐசிசி உலகக் கோப்பை (ICC CWC Final 2023) கிரிக்கெட் தொடர் 2023 இறுதி ஆட்டம், இன்று குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி (Narendra Modi Cricket Stadium, Ahmedabad) கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி (Team Australia) பவுலிங் தேர்வு செய்ததையடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்தது.
முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மா - சுப்மன் கில் (Rohit Sharma - Shubman Gill) ஜோடி நின்று விளையாடி அணிக்கு ரன்களை உயர்த்தும் என எதிர்பார்த்த வகையில், முதல் ஐந்து ஓவருக்குள் இரண்டு விக்கெட்டும் அடுத்தடுத்து பறிபோனது. ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன் எடுத்து கேட் அவுட்டாகி வெளியேறினார். அதேபோல, ஹில் 7 பந்துகளில் நான்கு ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார்.
கோலி - எஸ். ஐயர் (Virat Kohli - Shreyas Iyer) ஜோடி களத்தில் இருந்தபோது, விராட் கோலி நின்று ஆடிய நிலையில், வந்த வேகத்தில் 3 பந்துகளில் 4 ரன்கள் அடித்து ஐயர் அவுட்டாகி வெளியேறினார். விராட் கோலி - கே.எல் ராகுல் (K.L Rahul) ஜோடி நின்று களம் கண்டாலும், ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த சோகத்தில் திணறியது. CWC 2023 Final: முதற்கோணல் முற்றிலும் கோணலானதா?.. முதல் 3 விக்கெட்களால் நிலைகுலைந்த இந்தியா.!
விராட் கோலி 63 பந்துகளில் 54 ரன்கள் அடித்து அவுட் ஆகி விட, கே.எல் ராகுல் 107 பந்துகளில் 66 ரன்கள் மட்டுமே அடித்து அவுட் ஆகி வெளியேறினார். அதனைத்தொடர்ந்து, ரவீந்திர ஜடேஜா (Jadeja) 22 பந்துகளில் வெறும் ஒன்பது ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். சூரியகுமார் யாதவ் (Suryakumar Yadhav) 28 பந்துகளில் 18 ரன்னும், சமி 10 பந்துகளில் ஆறு ரன்னும், பும்ரா 3 பந்துகளில் ஒரு ரன்னும், குல்தீப் யாதவ் 18 பந்துகளில் 10 ரன்னும், சிராஜ் 8 பந்துகளில் 9 ரன்னும் எடுத்திருந்தனர். அடுத்தடுத்து 10 விக்கெட்டையும் இந்திய அணி இழந்தது.
இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 240 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. முதல் 10 ஓவருக்குள் மூன்று விக்கெட்டை இழந்த இந்தியா, விராட் கோலியை 28 வது ஓவரிலும், ஜடேஜாவை 35வது ஓவரிலும் இழந்தது. அதனைத்தொடர்ந்து, 40வது ஓவர் முதல் இறுதிக்கட்டம் வரை அடுத்தடுத்து 5 விக்கெட்டுகள் என மொத்த விக்கெட்டும் சரிந்தது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் பந்து வீசிய பந்துவீச்சாளர்கள், திறம்பட செயல்பட்டது இந்திய அணி ரன் சேர்க்க வழி இல்லாமல் திணறியது. ஆஸி., அணி கூடுதலாக 12 ரன்கள் மட்டுமே வழங்கி இருந்தது. Miss Universe 2023: உலக அழகி பட்டத்தை வென்றார் ஷெய்னிஸ் பலாசியோஸ்..! விபரம் இதோ.!
இடைவெளிக்கு பின் தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 10 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 60 ரன்கள் எடுத்திருந்தது. டேவிட் வார்னர் (David Warner) 3 பந்துகளில் 7 ரன்கள் அடித்து அவுட்டாகி வெளியேறினார். மார்ஷ் (Marsh) 15 பந்துகளில் 15 ரன்கள் அடித்து அவுட்டாகினார். ஸ்மித் (Steve Smith) 9 பந்துகளில் 4 ரன்கள் அடித்து அவுட்டாகினார். 1.1, 4.3, 7.0 ஓவரில் வார்னர், மார்ஷ், ஸ்மித் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகினர். ஆனால், இறுதிவரையில் ட்ராவிஸ் ஹெட் (Travis Head) நின்று ஆடி 120 பந்துகளில் 137 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மாரன்ஸ் (M Labuschagne) 110 பந்துகளில் 58 ரன்கள் அடித்திருந்தார்.
டார்விஸ் - மார்னஸ் ஜோடி நின்று ஆடியதால், ஆஸ்திரேலிய அணியின் ரன்கள் மளமளவென உயர்ந்தது. ஆஸ்திரேலிய அணி 43 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழந்து, இலக்கை எட்டி 241 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கிளன் மேக்ஸ்வெல் 1 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து அணியை வெற்றியடையச்செய்தார். 6வது முறை ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஆஸ்திரேலிய அணி வென்றுள்ளது. இந்தியா இறுதிவரை போராடி ரன்னராக இருக்கிறது. Bangalore Shocker: அறுந்துகிடந்த மின்கம்பியை மிதித்து தாய்-மகள் பரிதாப பலி: பெங்களூரில் சோகம்.!
போட்டியை காணுவதற்கு குஜராத் சென்ற இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பலரும் ஆட்டத்தின் இறுதியை காண மனமில்லாது, பாதியில் அரங்கத்தில் இருந்து கவலையுடன் வெளியேறினர். ஆஸி., - இந்தியா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் வரலாறு என்பது, மிகுந்த பலப்பரீட்சைக்கு மத்தியில் இன்று வரை மாறாது இருந்து வருகிறது. இந்தியாவின் தோல்வி, அடுத்த வெற்றிக்கு உந்துகோலாக அமைய வேண்டும் என்பதே பல இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு. உலகக்கோப்பையை இந்திய மண்ணில் வெற்றிபெற்று, ஆஸி., தனது மண்ணுக்கு எடுத்து செல்கிறது.
2027 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரை இனி எதிர்கொள்ள தயாராக வேண்டும்.