நவம்பர் 19, அகமதாபாத் (Sports News): 13வது ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 (ICC CWC 2023 Final) இறுதி ஆட்டம், இன்று குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி (Narendra Modi Cricket Stadium, Ahmedabad) கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியின் தொடக்கத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா (Team Australia) அணி பவுலிங் தேர்வு செய்ததையடுத்து, இந்திய அணி பேட்டிங் செய்தது.
முதலில் களமிறங்கிய ரோஹித் சர்மா (Rohit Sharma) - சுப்மன் கில் (Shubman Gill) ஜோடி நின்று விளையாடி அணிக்கு ரன்களை உயர்த்தும் என எதிர்பார்த்த வகையில், முதல் ஐந்து ஓவருக்குள் இரண்டு விக்கெட்டும் அடுத்தடுத்து பறிபோனது. ரோகித் சர்மா 31 பந்துகளில் 47 ரன் எடுத்து கேட் அவுட்டாகி வெளியேறினார். அதேபோல, ஹில் 7 பந்துகளில் நான்கு ரன்கள் மட்டுமே அடித்து வெளியேறினார்.
கோலி (Virat Kohli) - எஸ். ஐயர் (Shreyas Iyer) ஜோடி களத்தில் இருந்தபோது, விராட் கோலி நின்று ஆடிய நிலையில், வந்த வேகத்தில் 3 பந்துகளில் 4 ரன்கள் அடித்து ஐயர் அவுட்டாகி வெளியேறினார். விராட் கோலி - கே.எல் ராகுல் (K.L Rahul) ஜோடி நின்று களம் கண்டாலும், ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த சோகத்தில் திணறியது.
விராட் கோலி 63 பந்துகளில் 54 ரன்கள் அடித்து அவுட் ஆகி விட, கே.எல் ராகுல் 107 பந்துகளில் 66 ரன்கள் மட்டுமே அடித்து அவுட் ஆகி வெளியேறினார். அதனைத்தொடர்ந்து, ரவீந்திர ஜடேஜா (Ravendra Jadeja) 22 பந்துகளில் வெறும் ஒன்பது ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். சூரியகுமார் யாதவ் (Suryakumar Yadhav) 28 பந்துகளில் 18 ரன்னும், சமி (Mohd. Shami) 10 பந்துகளில் ஆறு ரன்னும், பும்ரா (Pumrah) 3 பந்துகளில் ஒரு ரன்னும், குல்தீப் யாதவ் (K. Yadhav) 18 பந்துகளில் 10 ரன்னும், சிராஜ் (Mohd. Siraj) 8 பந்துகளில் 9 ரன்னும் எடுத்திருந்தனர். அடுத்தடுத்து 10 விக்கெட்டையும் இந்திய அணி இழந்தது. Miss Universe 2023: உலக அழகி பட்டத்தை வென்றார் ஷெய்னிஸ் பலாசியோஸ்..! விபரம் இதோ.!
இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி (Team India) 240 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. முதல் 10 ஓவருக்குள் மூன்று விக்கெட்டை இழந்த இந்தியா, விராட் கோலியை 28 வது ஓவரிலும், ஜடேஜாவை 35வது ஓவரிலும் இழந்தது. அதனைத்தொடர்ந்து, 40வது ஓவர் முதல் இறுதிக்கட்டம் வரை அடுத்தடுத்து 5 விக்கெட்டுகள் என மொத்த விக்கெட்டும் சரிந்தது. ஆஸ்திரேலியா அணியின் சார்பில் பந்து வீசிய பந்துவீச்சாளர்கள், திறம்பட செயல்பட்டது இந்திய அணி ரன் சேர்க்க வழி இல்லாமல் திணறியது.
இந்திய அணியின் நட்சத்திர மற்றும் தொடக்க வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்ததும், அதுவரை கூச்சல் சத்தத்தில் அதிர்ந்துகொண்டு இருந்த ஒட்டுமொத்த மைதானமும் அமைதியாக தொடங்கியது. ஒருகட்டத்திற்கு மேல் இந்திய அணியால் பவுண்டரி, சிக்ஸர் அடிக்க எவவழியும் இல்லாமல் போனது. தமிழில் முதற்கோணல் முற்றிலும் கோணல் என்ற பழமொழி உண்டு. அந்த பழமொழிக்கேற்ப ஆரம்பத்தில் திணறிய இந்திய அணியின் தொடக்க வீரர்களால், அடுத்தடுத்து ஏமாற்றம் மிஞ்சியது.
ஒரு படையை அழிக்க, முதலில் நேரடி நேரடி சண்டையிட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவரது படையின் தொடக்க வீரர்களுக்கு பயம் காண்பித்துவிட்டால் போதும், அந்த பயம் ஒட்டுமொத்த படையையும் நடுங்கவைத்து, நம்பிக்கையை உடைத்து தோல்வியை அளிக்கும். ஆஸி., இந்தியாவுக்கு (Team India Vs Team Australia) மரண பயத்தை காண்பித்துவிட்டாலும், அதனை பந்துவீச்சில் சமாளிக்க வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.