Euro Cup Final 2024: இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி தோல்வி; 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின்..!

நேற்று நடைபெற்ற ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில், இங்கிலாந்தை அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Euro Cup Final 2024 (Photo Credit: @Khabarfast X)

ஜூலை 15, பெர்லின் (Sports News): ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பின் (Euro Football Championship 2024) 17-வது தொடர் ஜெர்மனியில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் 24 அணிகள் பங்கேற்ற யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி ஜெர்மனி தலைநகர் பெர்லின் நகரில் உள்ள ஒலிம்பியா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் ஸ்பெயின்-இங்கிலாந்து (Spain Vs England) அணிகள் மோதின. இரு அணிகளும் தொடக்கம் முதலே கோல் பதிவு செய்யும் நோக்கில் விளையாடின. இதன் முதல் பாதியில் கோல் எதுவும் பதிவு செய்யவில்லை. கிடைத்த ப்ரீ கிக்கை இரண்டு அணி வீரர்களும் தவறவிட்டனர். Aadi Month Festival: புனிதமான ஆடி மாதத்தில் என்னென்ன செய்யலாம்..? என்னென்ன செய்யக்கூடாது..? முழு விவரம் இதோ..!

இந்நிலையில், இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும், ஸ்பெயினின் இளம் வீரர் நிக்கோ வில்லியம்ஸ் 47-வது நிமிடத்தில் அற்புதமான கோல் அடித்தார். தரையோடு தரையாக சென்ற அந்த பந்து கோல் ஆனது. இதனையடுத்து 73-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் பால்மர் கோல் பதிவு செய்தார். பாக்ஸுக்கு வெளியே சில மீட்டர் தொலைவில் இருந்து பலமாக ஓங்கி உதைக்கப்பட்ட அந்த ஷாட் அற்புதமாக கோல் ஆனது. சுமார் 118 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து கோல் போஸ்ட்டுக்குள் சென்றது. இதன் மூலம் ஆட்டம் 1-1 என சமன் ஆனது.

பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் 86-வது நிமிடத்தில் ஸ்பெயினின் மைக்கெல் கோல் அடித்தார். இவர் மொராட்டாவுக்கு மாற்றாக களத்துக்கு வந்த வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆட்டநேர இறுதியில், ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி 4-வது முறையாக சாம்பியன் கோப்பையை வென்று அசத்தியது.