Aadi Month (Photo Credit: LatestLY

ஜூலை 15, சென்னை (Festival News): தமிழ் மாதங்களில் மிகவும் புனிதமான தெய்வ வழிபாட்டிற்குரிய மாதம், ஆடி மாதம் (Aadi Month) ஆகும். தட்சிணாயனம், உத்திராயனம் ஆகியவை கூடும் மாதம் என்பதால், இந்த மாதம் தெய்வ வழிபாட்டிற்கும், விரதம், நேர்த்திக்கடன் செய்வதற்கும் உகந்த மாதமாகும். மேலும் நம் முன்னோர்களை வழிபட்டு, தர்ம, கர்ம காரியங்கள் செய்வதற்கும் ஏற்ற மாதமாக ஆடி மாதம் உள்ளது. ஆடி மாதத்தின் சிறப்புகள் பற்றி தெரிந்தாலும் இந்த மாதத்தில் எவற்றை எல்லாம் செய்யலாம், எவற்றையெல்லாம் செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

ஆன்மீக வழிபாடு:

ஆடி மாதம் இறை வழிபாட்டிற்கான (Holy Month) சிறந்த மாதமாக உள்ளது. இந்த மாதத்தில் குல தெய்வ வழிபாடு, கிராம தேவதை வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாடு, சக்தி வழிபாடு, சிவ வழிபாடு, திருமால் வழிபாடு, மகாலட்சுமி வழிபாடு என அனைத்து தெய்வங்களையும் வழிபடுவதற்கு ஏற்றதாகும். பெண் மாதமான ஆடி மாதத்தை கடக மாதம் என்றும் சொல்கிறார்கள். அதனால் தான் இந்த மாதத்தில் சக்தி வழிபாடு சிறப்புடையதாக சொல்லப்படுகின்றது. ஆடி மாதத்தின் அதிபதியாக சந்திரன் சொல்லப்படுகிறார். இந்த மாதத்தில் சூரியனில் இருந்த சூட்சுமமான அதிர்வுகள் வெளிப்படுவதாக கூறப்படுகிறது. அதனால் இந்த மாதத்தில் இறை வழிபாடு, மந்திர ஜபம் போன்றவை செய்வது மிகச் சிறந்ததாகும். இந்த மாதத்தில் இறை வழிபாடு செய்தால் அது பல மடங்கு அதிக பலனை தரும். Car Swept Away By Flood: வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார்; 4 பேரை காப்பாற்றிய பொதுமக்கள்.. நெகிழவைக்கும் வீடியோ வைரல்..!

ஆடி மாதத்தில் சுப காரியங்கள் செய்யக் கூடாது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகும். ஆனால், எந்தெந்த காரியங்களை செய்யலாம், எவற்றை செய்யாமல் தவிர்ப்பது நல்லது என்பதை இதில் தெரிந்து கொள்வோம்.

ஆடி மாதத்தில் செய்ய வேண்டியவைகள்:

நேர்த்திக்கடன், இறை வழிபாடு ஆகியவற்றை செய்யலாம்.

மந்திர ஜபம், யாகம், ஹோமம் ஆகியவற்றை செய்ய உகந்த மாதமாகும்.

ஆடி மாதம், வாஸ்து புருஷன் நித்திரை விடும் மாதம் என்பதால், இந்த மாதத்தில் வீடு கட்டுமான பணிகளை ஆரம்பிக்கலாம்.

பெண்களுக்கு தாலி பெருக்கிக் போடலாம். திருமணமான பெண்கள் தாலி சரடு மாற்றிக்கொள்ளலாம்

ஆடி மாதத்தில் செய்ய கூடாதவைகள்:

ஆடி மாதத்தில் திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது.

இந்த மாதத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு வளைகாப்பு நடத்தக் கூடாது. குழந்தைகளுக்கு மொட்டை அடிக்கக் கூடாது.

புதுமனை புகுவிழா, வீடு இடமாற்றம் செய்வதை தவிர்க்க வேண்டும். மேலும், வீடு கிரகப்பிரவேசம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

ஆடி மாதத்தில் ஆண்களுக்கு திருமண வரன், பெண் பார்க்க செல்வதை தவிர்க்க வேண்டும்.