IND Vs IRE: மோசமான ஆட்டத்தால் தோல்வியை தழுவிய அயர்லாந்து; காரணம் என்ன..?

நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் அயர்லாந்து அணி இந்திய அணியுடனான போட்டியில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி தோல்வி கண்டது.

IND vs IRE (Photo Credit: @Cricketracker X)

ஜூன் 06, நியூயார்க் (Sports News): ஐசிசி டி20 உலகக் கோப்பை (ICC T20 World Cup 2024) தொடரில் நேற்று இரவு நடைபெற்று முடிந்த 8-வது லீக் போட்டியில் இந்தியா-அயர்லாந்து (IND Vs IRE) அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, அயர்லாந்து அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்து, பெவிலியன் திரும்பினர். AUS Vs OMA Highlights: ஸ்டோனிஸ் அபார ஆட்டம்; ஆஸ்திரேலியா அணி எளிதில் வெற்றி..!

அடுத்து வந்த மிடில் வரிசை ஆட்டகாரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறினர். அயர்லாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில், அயர்லாந்து அணி 16 ஓவர்களிலேயே 96 ரன்கள் மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் பாண்ட்யா 3 விக்கெட்களும், அர்ஸ்தீப் சிங், பும்ரா தலா 2 விக்கெட்களும், சிராஜ், அக்ஷர் பட்டேல் தலா 1 விக்கெட்களையும் எடுத்தனர்.

பின்னர், 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய இந்திய அணி அபாரமாக ஆடி 12.2 ஓவர்களில் 97 ரன்களை அடித்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மா அரைசதம் கடந்தார். ஆட்டநாயகன் விருதை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா பெற்று சென்றார். மோசமான பேட்டிங் மற்றும் பவுலிங் தான் அயர்லாந்து அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.