ஜூன் 06, ரிட்ஜ்டவுண் (Sports News): ஐசிசி டி20 உலகக் கோப்பை (ICC T20 World Cup 2024) தொடரில் இன்று நடைபெற்று முடிந்த 10-வது லீக் போட்டியில் ஆஸ்திரேலியா-ஓமன் (AUS Vs OMA) அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ஓமன் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. பின்னர், களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி முதல் 50 ரன்களில் 3 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின்னர் 4-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வார்னர்-ஸ்டோனிஸ் இருவரும் சிறப்பாக ஆடி அணிக்கு தேவையான ரன்களை குவித்தனர். Sunita Williams Blasts Off To Space: 3-வது முறையாக விண்வெளி பயணம்.. சுனிதா வில்லியம்ஸின் சாதனை..!
இறுதியில், ஆஸ்திரேலியா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்களை இழந்து 164 ரன்களை அடித்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில், ஸ்டோனிஸ் 36 பந்துகளில் 67 ரன்களை குவித்தார். பின்னர், 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஓமன் அணி ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே அடித்தனர்.
ஆஸ்திரேலியா அணி தரப்பில், ஸ்டோனிஸ் 3 விக்கெட்களும், ஸ்டார்க், எல்லிஸ், ஜாம்பா தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடி ஆல் ரவுண்டராக ஜொலித்த ஸ்டோனிஸ் ஆட்டநாயகன் விருதை பெற்று சென்றார்.
A brilliant knock from Marcus Stoinis took Australia to a formidable total 👏 #T20WorldCup | #AUSvOMA | Follow the match 👇https://t.co/y6FXJ9C1YT
— ICC (@ICC) June 6, 2024