AFG Vs BAN Highlights: வங்காளதேச அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி; ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்..!
இன்று நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில், வங்காளதேச அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனை படைத்தது.
ஜூன் 25, கிங்ஸ்டவுன் (Sports News): ஐசிசி டி20 உலகக் கோப்பை (ICC T20 World Cup 2024) தொடரில் லீக் போட்டிகள் முடிந்து, சூப்பர் 8 சுற்றின் இறுதிக்கட்ட ஆட்டத்தில் குரூப் 1 பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறும் 2-வது அணி எது என்று தீர்மானிக்கும் போட்டியில், ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் (AFG Vs BAN) அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற வங்காளதேச அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. Fire Accident Death: இன்வெர்ட்டரில் இருந்து தீ பரவி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி..! கண்ணீர் சோகம்..!
இதனையடுத்து, களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி முதலில் சற்று அதிரடி காட்டியது. பின்னர், சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 115 ரன்கள் அடித்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பில் குர்பாஸ் 43 ரன்கள் அடித்தார். வங்காளதேச அணி தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்களை வீழ்த்தினார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய வங்காளதேச அணி ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தடுமாறியது.
இதனிடையே, ஆட்டத்தில் 2 முறை மழை குறுக்கிட்டது. இதனால், ஆட்டம் 19 ஓவர்களில் 114 ரன்கள் அடித்தால் வெற்றி என இலக்க மாற்றப்பட்டது. தொடக்க ஆட்டகாரர் லிட்டன் தாஸ் மட்டும் நிலைத்து நின்று ஆடி அரைசதம் கடந்தார். விறுவிறுப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் இறுதியில் 17.5 ஓவர்களில் 105 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் கேப்டன் ரஷீத் கான் மற்றும் நவீன் உல் ஹக் தலா 4 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். ஆட்டநாயகன் விருதை நவீன் உல் ஹக் பெற்று சென்றார்.