ஜூன் 25, டெல்லி (Delhi News): டெல்லியில் உள்ள பிரேம் நகர் பகுதியில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்து (Fire Accident) அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இரண்டு தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு சென்றன. Battery Plant Fire Explodes: பேட்டரி தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 22 பேர் உடல் கருகி பரிதாப பலி.!
அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக தீயை அணைக்க முயன்றனர். இந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரையும் மீட்டு, ராவ் துலாராம் நினைவு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், இன்வெர்ட்டரில் இருந்து தீ பரவியதாகவும், கட்டிடத்தின் முதல் தளத்தில் உள்ள சோபாவிற்கும் தீ வேகமாக பரவியதன் விளைவாக, நான்கு குடும்ப உறுப்பினர்களும் அந்த தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து தெரியவந்தது.