R Ashwin & R Sharma Made History: புதிய சாதனைகளுக்கு சொந்தக்காரர்களாகிய அஸ்வின், ரோஹித்.. அசத்தல் விபரம் இதோ.!

பேட்டிங்கில் சம்பவம் செய்யும் ரோஹித், பவுலிங்கில் மாஸ் காண்பிக்கும் அஸ்வின் சேர்ந்து ஒருநாளில் வெவ்வேறு சாதனைகளை படைத்து இருக்கின்றனர்.

R Ashwin | Kuldeep IND Vs ENG 2024 Test Series (Photo Credit: @ANI_Digital X)

பிப்ரவரி 26, ஜார்கண்ட் (Cricket News): இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, தொடர்ந்து தனது நான்காவது டெஸ்ட் (IND Vs ENG Test Series 2024) தொடரில் இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும், எஞ்சிய இரண்டு ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றிபெற்று, இந்திய அணி இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

களத்தில் இந்திய சிங்கங்கள்: நடப்பு தொடரின் நான்காவது ஆட்டம் ஜார்கண்ட்டில் உள்ள மைதானத்தில் வைத்து அடைபெறுகிறது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 353 ரன்கள் குவிக்க, இந்தியா 307 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. மறுமுனையில் களமிறங்கியுள்ள இந்திய அணி 8 ஓவரில் 40 ரன்கள் எடுத்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 152 ரன்கள் தேவை. இன்றைய நாளிலேயே இந்தியா வெற்றியடையும் வகுப்புகள் இருக்கின்றன. 9 Died in Accident: அதிவேக பயணத்தால் நொடியில் நடந்த கோர விபத்து; உருக்குலைந்த கார்., 9 பேர் பரிதாப பலி.! 

முந்தைய சாதனையை சமன் செய்த (Ravichandran Ashwin) அஸ்வின்: இரண்டாவது இன்னிங்சில் தற்போது வரை இழப்பு ஏதும் இல்லை. களத்தில் ரோஹித் - ஜெய்ஷ்வால் ஜோடி நின்று ஆடி வருகிறது. இந்நிலையில், நேற்றைய ஆட்டத்தில் அஸ்வின் ஒரேநாளில் தனது 5 விக்கெட்டை வீழ்த்தி, தொடர்ந்து 35 வது முறையாக இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்தல் செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். இதன் வாயிலாக அவர் அனில் கும்பிளேவின் சாதனையை சமன் செய்துள்ளார். விரைவில் அதனை கடந்து செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரோஹித் (Rohit Sharma) புதிய சாதனை: அதேபோல, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தனது 4000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார். கடந்த 58 டெஸ்ட் தொடரில் ரோஹித் நேற்றைய போட்டியை சேர்ந்து 4003 ரன்கள் எடுத்துள்ளார். அவர் அதிகபட்சமாக 212 ரன்கள் சேகரித்து இருக்கிறார்.

இன்று தொடங்கும் எஞ்சிய ஆட்டத்தை ஸ்போர்ட்ஸ் 18 (Sports 18 Channel) தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமா (Jio Cinema) செயலியில் நேரலையில் கண்டுகளிக்கலாம்.