Bihar Kaimur Accident (Photo Credit: @ANI X)

பிப்ரவரி 26, கைமுர் (Bihar News): பீகார் மாநிலத்தில் உள்ள சசாரத்தில் இருந்து, வாரணாசி நோக்கி காரில் 9 பேர் பயணம் செய்துகொண்டு இருந்தனர். இவர்கள் பயணித்த வாகனம் கைமுர் (Kaimur Container Lorry Car Crash) மாவட்டம், மொஹானியா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் தேவ்களி என்ற இடத்தில் சென்றது.

தறிகெட்டு இயங்கி சோகம்: அதிவேகத்தில் கார் இயங்கியதாக தெரியவரும் நிலையில், தேசிய நெடுஞ்சாலை எண் 2ல் கார் - கனரக லாரி நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் கார் முற்றிலும் உருகுலைந்துவிட, காரில் பயணம் செய்த 9 பேரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். PM Modi Dwarka Visit: நனவாகிய பிரதமர் மோடியின் கனவு - துவராகவில் நேரடி தரிசனம் செய்த பிரதமர்..! 

லாரியில் மோதி விபத்து: ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகத்தில் சாலையின் எதிர்திசையில் தறிகெட்டு புகுந்த கார் லாரியின் மீது மோதி விபத்தில் சிக்கி இருக்கிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

9 பேர் பலி: காயமடைந்த நபர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்த 9 பேரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இவ்விபத்தால் சாலையில் வாகன நெரிசல் காணப்படவே, அதிகாரிகள் அதனை சீர் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விபத்தில் பலியானோரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.