IND Vs ENG Test Series: இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஷமி இடமம்பெறாததால் ரசிகர்கள் ஏமாற்றம்.!

இப்போட்டிகள் நிறைவடைந்ததும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

Mohd Shami | IND Vs ENG Test Series 2024 (Photo Credit: @Zimbu12_ / @BCCI X)

ஜனவரி 13, புதுடெல்லி (Sports News): ஆப்கானிஸ்தான் அணி இந்திய சுற்றுப்பயணம் (IND Vs AFG) மேற்கொண்டு 3 டி20 போட்டிகளில் அடுத்தடுத்து விளையாடுகிறது. முதல் டி20 போட்டி இரண்டு அணிகளுக்கு இடையே கடந்த 11 ஜனவரி 2024 அன்று நடைபெற்று முடிந்தது. முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் நாளை (ஜனவரி 14), ஜனவரி 17 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

ஆப்கானிஸ்தானை தொடர்ந்து இங்கிலாந்து அணியுடன் மோதல்: இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் நடைபெற்று முடிந்ததும், இந்தியா - இங்கிலாந்து (IND Vs ENG) அணிகளுக்கு இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்காக இங்கிலாந்து அணி இந்தியா வருகிறது. முதல் ஆட்டம் ஜனவரி 25 முதல் 29 வரையில் ஹைதராபாத்தில் வைத்து நடைபெறுகிறது. Heart Chilling CCTV Footage: 11 வினாடிகளில் 19 முறை சதக்., சதக்.. மனைவியை கத்தரிக்கோலால் குத்திய கணவன்.. குடிக்க பணம் தராததால் வெறிச்செயல்.! 

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்: அதனைத்தொடர்ந்து, இரண்டாவது டெஸ்ட் தொடர் பிப்ரவரி 02ம் தேதி தொடங்கி 06ம் தேதி வரையில் விசாகப்பட்டினத்தில் வைத்து நடைபெறுகிறது. மூன்றாவது ஆட்டம் பிப்ரவரி 15ம் தேதி முதல் 19ம் தேதி வரை ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. நான்காவது ஆட்டம் பிப்ரவரி 23ம் தேதி முதல் தொங்கி 27ம் தேதி வரை வைத்து ராஞ்சியில் நடைபெறுகிறது. ஐந்தாவது மற்றும் இறுதி ஆட்டம் மார்ச் 07ம் தேதி முதல் தொடங்கி 11ம் தேதி வரை நடைபெறுகிறது.

முதல் 2 போட்டிக்கான இந்திய அணி (IND Vs ENG Test Series Team India Squad): இந்நிலையில், பிசிசிஐ இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியை அறிவித்து இருக்கிறது. அதன்படி, ரோஹித் சர்மா தொடர்ந்து இந்திய அணியை வழிநடத்துவது உறுதி செய்யப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் சுப்னம் கில், யாஜஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், கேஎஸ் பாரத், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா, ஆவேஷ் கான் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முகம்மது ஷமியின் பெயர் இப்போட்டிகளில் இடம்பெறவில்லை. இதனால் அவரின் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.