IPL Auction 2025 Live

IND Vs ENG Test: முதல் டெஸ்ட் தொடரில் விளாசியெடுக்கும் இந்தியா: இங்கிலாந்தின் ரன்களை கடந்து முன்னிலை; விபரம் இதோ.!

இந்திய சிங்கங்களும் விடாமல் தாக்குப்பிடித்து வருகின்றனர்.

R. Jadeja & KL Rahul (Photo Credit: @BCCI X)

ஜனவரி 26, ஹைதராபாத் (Cricket News): இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி (IND vs ENG Test Series 2024), இந்திய அணிக்கு எதிராக 5 டெஸ்ட் தொடர்களில் அடுத்தடுத்து விளையாடுகிறது. இந்த டெஸ்ட் தொடர்களின் முதல் ஆட்டம் நேற்று தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் வைத்து தொடங்கியது. 29ஆம் தேதி வரை இரண்டு அணிகளுக்கு இடையே பலப்பரீட்சை நடக்கிறது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி ரன்கள் எடுத்த விபரம்: நேற்று முதல் இன்னிங்சில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி 64.3 ஓவரில் முடிவில் தனது பத்தி விக்கெட்டையும் இழந்து 246 ரன்கள் குவித்தது. இங்கிலாந்தின் சார்பாக களமிறங்கிய வீரர்களில் அதிகபட்சமாக க்ராவ்லே 40 பந்துகளில் 20 ரன்னும், பென் பக்கட் 39 பந்துகளில் 35 ரன்னும், ஜோ ரூட் 60 பந்துகளில் 29 ரன்னும், ஜானி 58 பந்துகளில் 37 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் (Ben Stokes) 88 பந்துகளில் 70 ரன்னும், டாம் 24 பந்துகளில் 23 ரன்னும் எடுத்திருந்தனர். அதனைத்தொடர்ந்து, இந்திய அணி களமிறங்கி தற்போது வரை விளையாடுகிறது. 26 ஆம் தேதி உணவு இடைவேளைக்கு முன் இந்திய அணி 76 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழந்து 309 ரன்கள் எடுத்துள்ளது. Two Youth Died of Electrocution: குடியரசு தினத்தன்று இப்படி சோகமா?.. தேசியக்கொடியேற்ற முயன்ற 2 இளைஞர்கள் மின்சாரம் தாக்கி பலி..! 

KL Rahul & Shreyas Iyer (Photo Credit: @BCCI X)

அசத்திய இந்திய அணி: இந்திய அணியின் சார்பில் விளையாடிய ஜெய்ஸ்வால் 74 பந்துகளில் 80 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார், ரோகித் சர்மா (Rohit Sharma) 27 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார், கில் 66 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அவுட் ஆகினார், கே எல் ராகுல் (KL Rahul) 123 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார், ஸ்ரேயாஸ் ஐயர் 63 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியேறினார். களத்தில் ஜடேஜா (Jadeja) மற்றும் பாரத் ஆகியோர் இருக்கின்றனர். ஜடேஜா 68 பந்துகளில் 45 ரன்னும், பரத் 37 பந்துகளில் 9 ரன்னும் எடுத்துள்ளனர்.

இரண்டாவது இன்னிங்சுக்காக முயற்சிக்கும் இங்கிலாந்து: முதல் இன்னிங்ஸ் இலக்கான 247 ரன்களை இந்திய அணி கடந்துவிட்ட நிலையில், எஞ்சிய ஐந்து விக்கெட்டுகளை வைத்து தொடர்ந்து விளையாடி ரன்களை குவித்து வருகிறது. இதனால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் நுழைய வேண்டிய கட்டாயத்திற்குள் இருக்கிறது. இந்திய அணியிடம் ஐந்து விக்கெட் இருப்பதால், இந்த ஐந்து விக்கெட்டையும் இங்கிலாந்து அணி காலி செய்தால் மட்டுமே இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கப்படும். இதனால் ஆட்டம் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்வின் & ஜடேஜா அசத்தல்: பந்துவீச்சை பொறுத்தமட்டில் இந்திய அணி சார்பில் விளையாடிய ஜடேஜா, அஸ்வின் (R Ashwin) ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். இங்கிலாந்து அணியின் சார்பில் விளையாடிய டாம் 2 விக்கெட்டையும், ஜேக், ரேஹன், ஜோ ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.