National Flag | Electrocution Warning (Photo Credit: Pixabay)

ஜனவரி 26, முழுகு (Telangana News): 75 வது குடியரசு தின கொண்டாட்டம் (Republic Day) இந்தியாவில் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்தின் தலைநகரில் ஆளுநர்-தமிழ்நாடு முதல்வர் இணைந்து மூவர்ணக்கொடியை ஏற்றி, இந்திய அரசியலமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளினை வரவேற்றனர். டெல்லியில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு தேசியக்கொடியை ஏற்றினார். பிரதமர் நரேந்திர மோடி மறைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு தனது மரியாதையை செலுத்தினார். கண்கவர் இராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

மின்சாரம் தாக்கி இளைஞர்கள் பலி: இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் (Mulugu Electrocution Death) உள்ள முழுகு மாவட்டம், சிவன் கோவில் வீதி எஸ்.டி காலனி பகுதியை சேர்ந்தவர்கள் லடா விஜய், அஞ்சித், சக்ரி. இளைஞர்கள் மூவரும் இன்று குடியரசு தினத்தினை கொண்டாட நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக தங்களின் குடியிருப்பு பகுதியில், வயல்வெளியை ஒட்டிய பகுதியில் கம்பம் நட முயற்சித்துள்ளனர். அச்சமயம் கொடிக்கம்பம் மின்சார கம்பிகளின் மீது உரசிவிட்டு, மின்சாரம் பாய்ந்ததால் மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த உள்ளூர் மக்கள் உடனடியாக அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் விஜய் (வயது 28), அஞ்சித் (வயது 38) ஆகிய இருவரும் உயிரிழந்துவிட்டதை உறுதி செய்தனர்.

Mars Helicoptor Mission End: செவ்வாயில் ஆராய்ச்சியை முடித்துக்கொண்ட நாசா.. காரணம் என்ன?.. அதிகாரபூர்வ அறிவிப்பு.! 

நிவாரணம் வழங்குவதாக அரசு உறுதி: சக்ரி மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர், உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாழ்வாக மின்கம்பிகள் சென்றதே விபத்திற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. இந்த விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த அமைச்சர் சீதக்கா, உடனடியாக பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தை நேரில் சந்தித்து ரூ.10 ஆயிரம் தற்காலிமாக நிதிஉதவி வழங்கினார். விபத்தில் உயிரிழந்த 2 இளைஞர்களின் குடும்பத்திற்கும் மாநில மின்வாரிய துறை சார்பில் ரூ.5 இலட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் இளைஞர்களின் கிராமமே சோகத்தில் மூழ்கியது.