Wrestler Vinesh Phogat Turned Politician: காங்கிரஸில் இணைந்த ஒலிம்பிக் நாயகி வினேஷ் போகத்.. அரசியலில் ஜொலிப்பாரா..?
இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத், ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
செப்டம்பர் 18, ஜுலானா (Haryana News): பாரிஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத் (Vinesh Phogat) இறுதிப் போட்டியில் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 50 கிலோ எடைப் பிரிவைச் சேர்ந்த வினேஷ் போகத், 100 கிராம் உடல் எடை அதிகம் இருந்ததால் கடைசி நேரத்தில் மல்யுத்த (Wrestler) விதிமுறையின்படி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதன்பிறகு மனமுடைந்த வினேஷ் போகத், மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். Woman Dies By Heart Attack: குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது தாய்க்கு மாரடைப்பு.. துடிதுடித்து பலியான வீடியோ வைரல்..!
இதனையடுத்து வினேஷ் போகத்தும், பஜ்ரங் புனியாவும் அதிகாரப்பூர்வமாக காங்கிரஸில் (Congress) இணைந்தனர். இந்நிலையில், வினேஷ் போகத் தற்போது ஹரியாணா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் (State Assembly Elections 2024) ஜுலானா (Julana) தொகுதியில் போட்டியிடுகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், 'நான் அரசியலில் நுழைய வேண்டாம் என்றுதான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால், போராட்டம் என்னும் மிகப்பெரிய சவால் நம் கண்முன் இருக்கும்போது மாற்றங்களை ஏற்படுத்த அரசியல் பலம் தேவை என்று முடிவெடுத்தேன். இதனால், என்னுடைய நன்மதிப்பை நான் இழந்து விடுவேன் என்றார்கள். ஆனால், என் மீது அன்புதான் அதிகமாகியிருக்கிறது' என அவர் தெரிவித்துள்ளார்.