Mariyappan Thangavelu: குழந்தை, மனைவியை காணாமல் கடும் உழைப்புக்கு கிடைத்த வெற்றி - மகனின் வெற்றியால் நெகிழ்ந்துபோன மாரியப்பனின் தாய்.!
1.88 மீட்டர் அளவில் உயரம் தாண்டி உலகளவில் சாதனை படைத்துள்ள மாரியப்பன் தங்கவேலு, தங்கப்பதக்கத்துடன் விரைவில் தாயகம் திரும்பவுள்ளார்.
மே 22, டோக்கியோ (Sports News): ஜப்பான் நாட்டில் உள்ள கோபெ நகரில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 5 நாட்களுக்கு முன்பு மே 17ம் தேதி தொடங்கிய பாரா ஒலிம்பிக் (Para Olympics) போட்டிகள் மே 25 வரையில் நடைபெறுகிறது. உலகளவில் பல நாடுகள் சார்பில் மாற்றுத்திறன் வீரர்-வீராங்கனைகள் போட்டியில் கலந்துகொண்டுள்ளனர். இந்தியாவின் சார்பில் கலந்துகொண்டவர்களில் தீப்தி ஜீவஞ்ஜி பெண்களுக்கான 400 மீ டி20 பிரிவில் தங்கப்பதக்கம் வென்றார். இதுவே நடப்பு பாரா ஒலிம்பிக் தொடரில் முதல் தங்கப்பதக்கம் ஆகும். அதனைத்தொடர்ந்து ப்ரீத்தி பால் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலமும், உயரம் தாண்டுதலில் நிஷாந்த் குமார் வெள்ளிப்பதக்கமும் வென்று சாதனை படைத்தனர். Vaikasi Visakam 2024: இன்று முருகனுக்கு உகந்த வைகாசி விசாகம்: பக்தர்கள் வெள்ளம், அரோகரா கோஷத்தால் களைகட்டும் திருச்செந்தூர்..!
தங்கமகன் மாரியப்பன் (Paralympics Athlete Mariyappan Thangavelu) வெற்றி: இந்நிலையில், தமிழகத்தின் தங்க மகனாக கவனிக்கப்படும் மாரியப்பன் தங்கவேலு, ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் 1.88 மீட்டர் அளவில் உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதனால் இந்தியாவும், தமிழகமும் மீண்டும் பெருமிதம் கொண்டுள்ளது. மாரியப்பனுக்கு தொடர்ந்து வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில், அவரின் தாயார் சரோஜா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "மகன் மாரியப்பன் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்றுள்ளது மகிழ்ச்சியை தருகிறது. கடந்த 6 மாதமாக குடும்பம், குழந்தை, மனைவி என அவர்களை கூட நேரில் பார்க்காமல் ஓயாது தொடர் பயிற்சி மேற்கொண்டு வந்தார். இன்று அதற்கான பலன் கிடைத்துள்ளது" என கூறினார்.