Prakhar Chathurvedi New Record: U-19 பிரிவில் புதிய சாதனை: 404 ரன்கள் குவித்து அசத்திய பிரகர் சதுர்வேதி.. முழு விபரம் இதோ.!
இந்தியாவில் சாதனையாளர்களுக்கு பஞ்சமில்லை, அவர்களுக்கான வாய்ப்பு கிடைக்கும்போது திறமைகள் வெளிப்படும் என்பதற்கேற்ப, மீண்டும் ஒரு கிரிக்கெட்டில் சத்திரத்தை மாற்றப்போகும் நாயகன் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.
ஜனவரி 15, பெங்களூர் (Cricket News): இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் நடத்தப்படும் அண்டர் 19 கூச் பெஹர் ட்ராபி (Cooch Behar Trophy) போட்டியில், இன்று கர்நாடகா மற்றும் மும்பை அணிகள் தங்களுக்கு இடையே பலப்பரீட்சை நடத்தியது. இந்த ஆட்டம் பெங்களூரில் உள்ள கே.எஸ்.சி.ஏ (KSCA Stadium) கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. ஆட்டத்தில் கர்நாடகா அணியின் சார்பில் விளையாடிய பிரபாகர் சதுர்வேதி (Prakhar Chaturvedi), மும்பை அணியின் பந்துகளை சிதறவிட்டு தனிநபராக 404 ரன்கள் சேர்த்து புதிய சாதனையை படைத்தார். அண்டர் 19 பிரிவில் சதுர்வேதி 638 பந்துகளை எதிர்கொண்டு, 404 ரன்கள் எடுத்து இருக்கிறார். NITI Aayog- Decline In Poverty: கடந்த 10 ஆண்டுகளில் 24 கோடி மக்கள் வறுமையில் இருந்து விடுவிப்பு.. மத்திய அரசின் சரித்திர சாதனை.. நிதி ஆயோக் அறிவிப்பு.!
புதிய சாதனை படைத்த சதுர்வேதி: இது கடந்த 1999 ஆம் ஆண்டு யுவராஜ் சிங் சாதனையை முறியடித்து இருக்கிறது. 99-களில் பஞ்சாப் அண்டர் 19 சார்பில் விளையாடிய யுவராஜ் சிங் 358 ரன்கள் சேர்த்து புதிய சாதனை படைத்தார். அப்போதுதான் தோனி யுவராஜை நேரில் சந்தித்தார். தற்போது யுவராஜ் சிங்கின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ள சதுர்வேதி, 638 பந்துகளில் ஸ்டிரைக் ரேட் 63.32 என்ற அளவில் நிலைப்படுத்தி இருக்கிறார். 404 ரன்களில் 46 போர்கள், மூன்று அதிரடி சிக்ஸர்கள் என கிரிக்கெட் மைதானத்தை அவர் தெறிக்க விட்டிருக்கிறார்.
முதல் இன்னிங்ஸ் நிறைவு: கர்நாடகா அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்து மொத்தமாக 8 விக்கெட் இழப்புக்கு 223 ஓவர்களில் 890 ரன்கள் எடுத்து இருக்கிறது. அதனைத் தொடர்ந்து, மும்பை அணி 350 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 510 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகா அணி இன்று வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தின் வாயிலாக மீண்டும் ஒரு யுவராஜ் சிங், தோனி, சச்சின் போன்ற ஜாம்பவான்கள் இந்திய அணிக்கு கிடைத்துள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் பெருமை கொள்கின்றனர். Accident Video: சாலையில் உருண்டோடிய கார்.. நான்கு பேர் காயம்... நெஞ்சை பதைபதைக்கும் வீடியோ..!
போட்டி விபரம்: கர்நாடக அணியின் சார்பில் விளையாடிய சதுர்வேதி 638 பந்துகளில் 404 ரன்னும், கார்த்திக் 67 பந்துகளில் 50 ரன்னும், 228 பந்துகளில் 169 ரன்னும், கார்த்திகேயா 17 பந்துகளில் 72 ரன்னும், ஹர்திக் ராஜ் 80 பந்துகளில் 51 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். 223 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு முதல் இன்னிங்சில் கர்நாடக அணி 890 ரன்கள் சேர்த்து இருந்தது.
அதேபோல, மும்பை இந்தியன்ஸ் அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில் முதல் இன்னிங்சில் ஆவிஸ் கான் 41 பந்துகளில் 16 ரன்னும், ஆயுஷ் 180 பந்துகளில் 145 ரன்னும், நுதன் 80 பந்துகளில் 40 ரன்னும், மனன்ம் பாத் 66 பந்துகளில் 28 ரென்னும், தானிஷ் மெகர் 35 பந்துகளில் 11 ரன்னும், பிரதீப் 86 பந்துகளில் 30 ரன்னும், பிரேம் 71 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். ஆட்டத்தின் முடிவில் பத்து விக்கெட் இழந்த மும்பை அணி 350 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. 113.5 ஓவரில் மும்பை அணி ஒட்டுமொத்தமாக தனது அனைத்து விக்கெட்டையும் இழந்தது.