Mohammed Shami Receives Arjuna Award: மாபெரும் கவுரவம்.. முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது..!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு ஜனாதிபதி முர்மு அர்ஜுனா விருது வழங்கி கௌரவித்தார்.

Mohammed Shami Receives Arjuna Award (Photo Credit: @ANI X)

ஜனவரி 09, புதுடெல்லி (New Delhi): 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று வழங்கினார். மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருதை பேட்மிண்டன் வீரர்கள் சிராக் சந்திரசேகர் ஷெட்டி, ரங்கிரெட்டி சாத்விக் சாய் ராஜ் ஆகியோர் பெற்றனர். விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது லலித் குமார், ஆர்.பி. ரமேஷ், ஷிவேந்திர சிங், கணேஷ் பிரபாகர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் மஞ்சுஷா கன்வார், வினீத் குமார் ஷர்மா மற்றும் கவிதா செல்வராஜ் ஆகிய வீரர்களுக்கும் விருதுகள் பெற்றனர். மேலும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பையை பஞ்சாபை சேர்ந்த குருநானக் பல்கலைக்கழகத்திற்கு வழங்கினர். Keshav Maharaj Opens Up: ராம் சியா ராம் பாடலின் பின்னணி ரகசியம்.. தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் பரபரப்பு பேட்டி..!

மேலும் அர்ஜூனா விருதை, கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தடகள வீரர் சங்கர், செஸ் வீராங்கனை வைஷாலி உள்ளிட்ட 26 பேர் பெற்றனர். இந்த ஆண்டு அர்ஜுனா விருது பெறும் 26 விளையாட்டு வீரர்களில் ஒரே கிரிக்கெட் வீரர் முகமது ஷமி ஆவார். ஷமி அண்மையில் இந்திய மண்ணில் நடைப்பெற்ற உலகக்கோப்பை தொடரில் 24 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார். அத்துடன் பல்வேறு சாதனைகளை உலக கிரிக்கெட் அரங்கில் படைத்துள்ளார்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Tags

Arjuna Award Athlete Shankar Badminton players Chirag Chandrasekhar Shetty Chess Player Vaishali Cricketer Mohammed Shami Draupadi Murmu Dronacharya Award Ganesh Prabhakar Kavita Selvaraj Lalit Kumar LIve breaking news headlines Major Dayan Chand Khel Ratna Manjusha Kanwar Mohammed Shami Mohammed Shami was given an Arjuna Award R.P. Ramesh Rangritty Satvik Sai Raj Shivendra Singh Vineeth Kumar Sharma அர்ஜுனா விருது ஆர்.பி. ரமேஷ் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கணேஷ் பிரபாகர் கவிதா செல்வராஜ் கிரிக்கெட் வீரர் முகமது ஷமி குடியரசுத் தலைவர் செஸ் வீராங்கனை வைஷாலி தடகள வீரர் சங்கர் திரௌபதி முர்மு துரோணாச்சார்யா விருது புதுடெல்லி பேட்மிண்டன் வீரர்கள் சிராக் சந்திரசேகர் ஷெட்டி மஞ்சுஷா கன்வார் முகமது ஷமி முகமது ஷமிக்கு அர்ஜுனா விருது மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா ரங்கிரெட்டி சாத்விக் சாய் ராஜ் லலித் குமார் வினீத் குமார் ஷர்மா ஜனாதிபதி முர்மு ஷிவேந்திர சிங்


Share Now