Argentina Vs Morocco Paris Olympics: பாரிஸ் ஒலிம்பிக்கில் அர்ஜென்டினா வீரர்களை தாக்கிய ரசிகர்கள்.. முதல் நாளே பெரும் பரபரப்பு..!

பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் முதல் ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியை 1-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மொராக்கோ அணி வெற்றி பெற்றது.

Fans attacked Argentina players (Photo Credit: @TimesAlgebraIND X)

ஜூலை 25, பாரிஸ் (Sports News): பாரிஸ் ஒலிம்பிக் 2024 (Paris Olympics 2024), குரூப் ஸ்டேஜில் நேற்று நடைபெற்ற (ஜூலை 24) போட்டியில் அர்ஜென்டினா தனது முதல் ஆட்டத்தில் 1-2 என்ற கோல் கணக்கில் மொராக்கோவிடம் (Argentina Vs Morocco) தோல்வியடைந்து அதிர்ச்சியளித்தது. இந்த போட்டியில் அர்ஜென்டினா அணிக்கு எதிராக மொராக்கோ அணி தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. ஒரு கட்டத்தில் மொரோக்கோ அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தபோது, அர்ஜென்டினா வீரர் கிறிஸ்டியன் மெடினா அபாரமாக 2 கோல் அடித்து அர்ஜென்டினாவை 2-2 என டிரா செய்தார்.

போட்டியானது 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தநிலையில், மைதானத்தில் அமர்ந்திருந்த மொராக்கோ ரசிகர்கள் அர்ஜென்டினா வீரர்கள் மீது பாட்டில்களை வீசத் தொடங்கினர். மேலும், ஒரு சில மொராக்கோ ரசிகர்கள் கால்பந்து விளையாடும் மைதான களத்தில் வந்து அர்ஜென்டினா வீரர்களை தாக்க முயற்சி மேற்கொண்டனர். ரசிகர்களின் இந்த ஆக்ரோஷமான செயல்களை தடுக்க, காவல்துறையினர் களமிறங்கி வீரர்களை பாதுகாத்தனர். ரசிகர்களின் இடையூறு காரணமாக, போட்டி உடனடியாக ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 2 மணிநேரம் கழித்து, ரசிகர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, பார்வையாளர்கள் இல்லாமல் போட்டி நடைபெற்றது. Cobra Bit A Drunken Youth: மதுபோதையில் நல்ல பாம்பிடம் விடாப்பிடியாக வம்பிழுத்து உயிருக்கு போராடும் குடிகார ஆசாமி; பகீர் வீடியோ வைரல்..!

ரசிகர்கள் தாக்குதலில் ஈடுபட்டபோது அர்ஜென்டினா வீரர் கிறிஸ்டியன் மெடினா 2-வது கோல் அடித்ததாக கூறி, போட்டி நடுவர் ஆப் சைடு என அறிவித்தார். இதன்மூலம், மெடினா அடித்த 2-வது கோல் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மொராக்கோ அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. நடுவரின் இந்த முடிவுக்கு அர்ஜென்டினா ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கடும் கோபமுற்று, சமூக வலைதளங்களில் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர். அர்ஜென்டினா அணியின் பயிற்சியாளர் ஜேவியர் மஷெரானோவும் போட்டிக்குப் பிறகு, 'இது என் வாழ்க்கையில் நடந்த மிகப்பெரிய சர்க்கஸ், இதுபோன்ற எதையும் நான் பார்த்ததில்லை' என்று கூறியுள்ளார். அதேபோல், அர்ஜென்டினா வீரர் லியோனல் மெஸ்ஸியும் இந்த போட்டி குறித்து, 'நம்ப முடியவில்லை' என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.