UGA Vs NZ Highlights: 40 ரன்களில் சுருண்ட உகாண்டா; நியூசிலாந்து அணி அபார வெற்றி..!
இன்று நடைபெற்ற 32-வது லீக் போட்டியில் உகாண்டா அணியை வெறும் 40 ரன்கள் சுருட்டி நியூசிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்று அசத்தியது.
ஜூன் 15, டிரினிடாட் (Sports News): ஐசிசி டி20 உலகக் கோப்பை (ICC T20 World Cup 2024) தொடரில் இன்று நடைபெற்று முடிந்த 32-வது லீக் போட்டியில் உகாண்டா-நியூசிலாந்து (UGA Vs NZ) அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, களமிறங்கிய உகாண்டா அணி வீரர்கள் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. Thrissur Earthquake: கேரளா மாநிலம் திரிசூரில் மிதமான நிலநடுக்கம்; தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் அறிவிப்பு.!
உகாண்டா அணியில் அதிகபட்சமாக கென்னத் வைஸ்வா 11 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்தனர். உகாண்டா அணி 18.4 ஓவர்களில் 40 ரன்களை மட்டுமே அடித்து ஆல் அவுட் ஆனது. நியூசிலாந்து அணி சார்பில் சவுதி 3 விக்கெட், போல்ட், சான்ட்னர், ரவீந்திரா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
பின்னர், 41 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை துரத்திய நியூசிலாந்து அணி அதிரடியாக விளையாடி 5.2 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 41 ரன்களை அடித்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை சிறப்பாக பந்துவீசிய நியூசிலாந்து வீரர் டிம் சவுதி பெற்று சென்றார்.