Sheetal Devi Receives Arjuna Award: குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு கரங்களால் அர்ஜுனா விருது பெற்றார் பாரா வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி: கொண்டாடும் இந்தியர்கள்.!

அவர்களின் திறமைக்கு தொடர்ந்து அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

Sheetal Devi Receives Arjuna Award from President Droupadi Murmu (Photo Credit: @ANI X)

ஜனவரி 09, புதுடெல்லி (New Delhi): சீனாவில் உள்ள ஹாங்சூ நகரில், ஆசிய விளையாட்டுப்போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியின் வாயிலாக இந்தியா 111 பதக்கங்கள் பதக்கங்களை பெற்றது. இந்திய பாரா ஆசிய விளையாட்டு வீரர்களின் அடுத்தடுத்த வெற்றி 29 தங்கம், 31 வெள்ளி மற்றும் 51 வெண்கல பதக்கங்களை குவித்தது. வெற்றிவாகை சூடி இந்தியா வந்த வீரர்களுக்கு, நமது மண்ணில் உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது.

ஹாங்சூ பாரா ஆசிய விளையாட்டுப்போட்டியில் அசத்தல்: ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷ்த்வார் மாவட்டம், லாய்தர் கிராமத்தில் பிறந்த பெண்மணி ஷீத்தல் தேவி (Sheetal Devi). 16 வயதாகும் சிறுமி பிறந்ததில் இருந்து ஃபோகோமெலியா என்ற உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். எனினும் அவரின் தன்னம்பிக்கை மற்றும் விடா முயற்சி, பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்க வாய்ப்பை பெற்றுத்தந்தது. கடந்த ஹாங்சூ ஆசிய விளையாட்டுபோட்டிகள் தொடரில் கலந்துகொண்ட சிறுமி ஷீத்தல், தங்கப்பதக்கத்தை வென்றார். அவரின் வெற்றியை ஒவ்வொரு இந்தியரும் கொண்டாடி மகிழ்ந்தனர். Ronaldo Soulmate: ஆத்மதோழியுடன் ஆத்மார்த்த காதலில் ரொனால்டோ; வைரல் கிளிக்ஸ் இதோ.! 

அர்ஜுனா விருது பெற்ற ஷீத்தல்: வில் அம்பு எய்தல் பிரிவில் ஷீத்தல் தனது பங்களிப்பை வெளிப்படுத்தி, இந்தியாவுக்காக தனது தங்கப்பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார். இந்நிலையில், ஷீட்டல் தேவி குடியரசுத்தலைவர் கைகளால் அர்ஜுனா விருதை (Arjuna Award) பெற்றார். தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களின் சாதனையை அங்கீகரிக்கும் பொருட்டு வழங்கப்படும் விருதுகளில், பாரா வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவி, ஜனாதிபதி திரௌபதி முர்முவின் (President Droupadi Murmu) கரங்களால் அர்ஜுனா விருதை பெற்றார். இதனால் அவரின் சொந்த குடும்பம் மட்டுமல்லாது, இந்திய குடும்பமும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.