Pragg stuns World Champion Ding Liren of China: சீன வீரரை செஸ் போட்டியில் மண்ணைக் கவ்வவைத்த இந்தியனாக பிரக்யானந்தா; நார்வே செஸ் போட்டியில் அசத்தல்.!
அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்று, இந்தியாவை உலக அரங்கத்தில் பெரும் பாராட்டுதலுக்கு வழிவகுத்துள்ள பிரக்யானந்தா சீன வீரரை தொடர்கடித்து இந்தியாவின் மனதை குளிர வைத்துள்ளார்.
ஜூன் 04, ஸ்டாவாங்கர் (Sports News): நார்வே நாட்டில் நடைபெற்று வரும் செஸ் போட்டியில், கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த போட்டியில் இந்திய இளம் வீரர் பிரக்யானந்தா (Praggnanandhaa), உலகின் நம்பர் 1 செஸ் பிளேயரான மேக்னஸ் கார்ல்சனை தோற்கடித்தார். அதனைத்தொடர்ந்து, நம்பர் 2 பிளேயரான பேபியானா கருவானா அடுத்த போட்டியில் தோற்கடிக்கப்பட்டார். இதனால் பிரக்யானந்தா நார்வே செஸ் போட்டியில் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டார். Israelis Banned From Entering Maldives: இஸ்ரேலியர்கள் மாலத்தீவில் நுழைய தடை; அதிபர் முகமது முயிசு அதிரடி அறிவிப்பு..!
வெற்றிகளை குவிக்கும் பிரக்யானந்தா: இந்நிலையில், பிரக்யானந்தா இன்று நடைபெற்ற ஆட்டத்தில், உலக செஸ் சாம்பியனில் ஒருவரான சீனாவை சார்ந்த டிங் லீரேனை தோற்கடித்தார். இதனையடுத்து, பிரக்யானந்தா, நார்வே செஸ் போட்டியில் 11 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தை தக்க வைத்துள்ளார். தொடர்ந்து அவர் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட உள்ளார்.
அவரது தங்கை வைஷாலியும் 10 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலின்படி, முதல் மூன்றாவது இடத்தை தக்க வைத்துள்ளார். அவர் ஜூன் நான்காம் தேதியான இன்று, ஜூன் 6, 7 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளார். இந்த போட்டிகளில் வெற்றியடையும் பட்சத்தில், அவர் தொடர்ந்து புள்ளிபட்டியலில் அடுத்தடுத்த முன்னேற்றங்களை காணுவார்.
கேல் இந்தியா பாராட்டு:
இந்தியாவின் அதிசயமே என நார்வே செஸ் குழு பாராட்டு: