Divya Deshmukh (Photo Credit : @FIDE_chess X)

ஜூலை 28, ஜார்ஜியா (Sports News): ஜார்ஜியாவின் பாட்டுமி நகரில் நடைபெற்ற ஃபிடே மகளிர் உலக கோப்பை சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவைச் சேர்ந்த கொனேரு ஹம்பி - திவ்யா தேஷ்முக் மோதினர். இந்த சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்று கடந்த சனிக்கிழமை நடைபெற்று டிராவில் முடிந்தது. இதனால் இரண்டாவது சுற்று இன்று நடைபெற்ற நிலையில், 19 வயதேயான திவ்யா தேஷ்முக் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். ENG Vs IND 4th Test, Day 3: ஓல்லி போப் - ஜோ ரூட் இணை அபாரம்.. இங்கிலாந்து நிலையான ஆட்டம்..!

தங்கப்பதக்கத்தை வென்ற இந்திய செஸ் வீராங்கனை :

உலகக்கோப்பை செஸ் போட்டியில் வென்ற இந்தியாவின் திவ்யாவிற்கு (Divya Deshmukh) தங்கப்பதக்கமும், ஹம்பிக்கு வெள்ளிப்பதக்கமும் கிடைத்துள்ளது. மகளிர் உலகக் கோப்பை செஸ் தொடரில் இந்திய வீராங்கனை வெல்வது இதுவே முதல் முறையாகும். இரண்டு வீராங்கனைகளும் தங்களது அரையிறுதி சுற்றி போட்டியில் சீன வீராங்கனைகளை எதிர்த்து வென்று முன்னேறினர்.

குவியும் பாராட்டுகள் :

இதில் முதல் சுற்றில் இருவரின் ஆட்டமும் டிராவில் முடிந்ததால் இரண்டாவது சுற்று இன்று நடைபெற்ற நிலையில், ஹம்பியை தோற்கடித்து 19 வயதான திவ்யா வெற்றி பெற்றுள்ளார். இந்திய வீராங்கனை திவ்யா வெற்றி பெற்ற பின் ஆனந்த கண்ணீர் வடித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. பாராட்டுகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

ஆனந்த கண்ணீரில் திவ்யா தேஷ்முக் :