Rishabh Pant Thanks: மரணத்தை தொட்டு வந்த ரிஷப்.. உயிரை காப்பாற்றிய நாயகர்களுக்கு நன்றி தெரிவித்து நெகிழ்ச்சி..!
விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ரிஷப் பண்டை துரிதமாக காப்பாற்றி பத்திரமாக மருத்துவமனையில் அனுமதி செய்தவர்களை நேரில் அழைத்து கிரிக்கெட்டர் ரிஷப் பண்ட் பாராட்டி இருக்கிறார்.
ஜனவரி 17, மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ரிஷப் பண்ட் (Cricketer Rishabh Pant), கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் இருந்து டெஹ்ராடூன் (Dehradun) செல்லும் போது விபத்தில் சிக்கினார். தனது குடும்பத்துடன் புத்தாண்டை வரவேற்க, குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க தனியாக காரை அவரை இயக்கி சென்றார்.
அப்போது, ரூர்கே (Roorkee) நகருக்கு சில கிலோமீட்டர் முன்னால் சென்றுகொண்டு இருக்கையில், அவரின் கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது. விபத்தில் (Rishabh Pant Accident) அவரின் கார் முற்றிலும் தீக்கு இரையானது. விபத்தில் சிக்கிய ரிஷப் பண்டை மீட்ட ரஜத் குமார் மற்றும் நிஷி குமார் (Rajat Kumar & Nishu Kumar) மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். Weather Update: நீலகிரியில் உறைபனி, பிற மாவட்டங்களில் கடும் பனி – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தற்போது மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் ரிஷப் பண்ட் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறி வரும் நிலையில், அவர் தன்னை கைப்பற்றியோருக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார். அவர்களை நேரில் அழைத்து நலம் விசாரித்த ரிஷப் பண்ட், அவர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பதிவு செய்துள்ள ட்விட்டர் பதிவில், "ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என்னால் நன்றி சொல்ல முடியாமல் போயிருக்கலாம், ஆனால் எனது விபத்தின் போது எனக்கு உதவிய இந்த இரண்டு ஹீரோக்களையும் நான் அங்கீகரிக்க வேண்டும். நான் பாதுகாப்பாக மருத்துவமனைக்குச் சென்றேன். ரஜத் குமார் & நிஷு குமாருக்கு நன்றி. நான் என்றென்றும் நன்றியுடையவனாகவும், கடமைப்பட்டவனாகவும் இருப்பேன்" என கூறியுள்ளார்.