Asian Para Games Men's High Jump: பாரா ஆசிய விளையாட்டுகளில் இந்தியவுக்கு முதல் தங்கம், வெள்ளிப்பதக்கம்; சைலேஷ் குமார், தங்கவேல் மாரியப்பன் சாதனை.!
ஆசிய விளையாட்டு போட்டியை போல, பாரா ஆசிய விளையாட்டு போட்டியிலும் இந்திய வீரர்கள் வெற்றிவாகை சூடி வருகின்றனர்.
அக்டோபர் 23, ஹாங்சோ (Sports News): சீனாவில் உள்ள ஹாங்சோ (Hangzhou 2022) நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், இந்திய வீரர்கள் 28 தங்கப் பதக்கம் உட்பட 107 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
இதனைத்தொடர்ந்து, தற்போது ஹாங்சோ விளையாட்டு மைதானத்தில் ஆசிய பாரா (AsianParaGames ) விளையாட்டு தொடர் நேற்று முதல் தொடங்கிய நடைபெற்ற வருகிறது. 4000-க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் இந்த போட்டியில், 22 வகை விளையாட்டுக்கள், 616 நிகழ்வுகள் நடைபெறுகின்றன. Myanmar Jammu Kashmir Earthquake: மியான்மர், ஜம்மு காஷ்மீர் பகுதியில் அடுத்தடுத்து மிதமான நிலநடுக்கம்..!
ஆசிய விளையாட்டுகளை போல, பாரா போட்டியிலும் இந்திய வீரர்கள் பதக்கங்களை வென்று வெற்றிவாகை சூடி வருகின்றனர். தற்போது இந்திய வீரர்கள் சைலேஷ்குமார் (Shailesh Kumar) மற்றும் மாரியப்பன் தங்கவேலு (Mariyappan Thangavelu) ஆகியோர் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா தனது முதல் தங்கப் (Gold Medal) பதக்கத்தை பெற்றுள்ளது. உயரம் தாண்டுதல் போட்டியில் சைலேஷ் குமார் 1.82 மீட்டர் உயரம் தாண்டி முதல் தங்கப் பதக்கத்தை உறுதி செய்த நிலையில், மாரியப்பன் தங்கவேலு 1.80 மீட்டர் தாண்டி வெள்ளிப் (Silver Medal) பதக்கத்தை வென்றுள்ளார்.