Stunning Catch By Ramandeep Singh: ரமன்தீப் சிங்கின் வியக்கவைக்கும் கேட்ச்; விக்கெட் எடுத்து புல்லரிக்க வைத்த பீல்டிங்..! வீடியோ உள்ளே.!
நேற்றிரவு நடைபெற்ற 54-வது லீக் ஆட்டத்தில், சிறப்பான முறையில் கேட்ச் பிடித்து அசத்திய ரமன்தீப் சிங்கின் வீடியோ காட்சிகள் இதில் இணைக்கப்பட்டுள்ளது.
மே 06, லக்னோ (Sports News): ஐபிஎல் தொடரில் நேற்று இரவு நடைபெற்ற 54-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (LSG Vs KKR) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து, களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 235 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணி தரப்பில் அதிரடியாக விளையாடி சுனில் நரைன் 81 ரன்களை குவித்தார். Minor Boy Died: அந்தரங்க உறுப்பில் கிரிக்கெட் பந்து பட்டு 11 வயது சிறுவன் பரிதாப பலி; விளையாட்டு வினையான சோகம்.!
பின்னர், 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் அர்ஷின் குல்கர்னி அதிரடியாக ஆட்டத்தை துவக்கினர். இதில் மிட்செல் ஸ்டார்க் வீசிய 2-வது ஓவரின் கடைசி பந்தை அர்ஷின் குல்கர்னி அடிக்க முயன்றபோது, அது டீப் பாக்வர்ட் பாய்ண்ட் (Deep Backward Point) திசைக்கு சென்றது. அதனை பாயிண்ட் திசையில் நின்ற பீல்டர் ரமன்தீப் சிங் பின்புறமாக ஓடிச் சென்று டைவ் அடித்து அற்புதமாக கேட்ச் பிடித்து அசத்தினார். இந்த சிறப்பான கேட்ச் மூலம் ஆட்டத்தின் அதிரடி சற்று குறைய தொடங்கியது.
லக்னோ அணி அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்களை பறிகொடுத்தது. இறுதியில், 16.1 ஓவர்களில் 137 ரன்களுக்கு லக்னோ அணி ஆல் அவுட் ஆனது. கொல்கத்தா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை அதிரடியாக விளையாடிய கொல்கத்தா அணி வீரர் சுனில் நரைன் பெற்றுச் சென்றார்.