மே 03, புனே (Maharashtra News): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே, லோஹிகன் பகுதியை சேர்ந்த 11 வயதாகும் சிறுவன் ஷவுர்யா காளிதாஸ் காண்டவே (Shaurya Kalidas Khandve). சிறுவனுக்கு மல்யுத்த வீரர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. தற்போதில் இருந்தே அதற்கான பயிற்சி எடுத்து வருகிறார். கிடைக்கும் நேரங்களில் அவர்களின் நண்பர்களுடன் பிற விளையாட்டுகளை விளையாடியும் மகிழ்ந்து வந்துள்ளார்.
அந்தரங்க பகுதியை தாக்கிய பந்து: இந்நிலையில், மே 02ம் தேதி சிறுவன் காளிதாஸ் (Minor Boy Dies Cricket Ball Struck to Private Parts), அங்குள்ள ஜகத்குரு விளையாட்டு பயிற்சி மையத்தின் அரங்கில், இரவு 09:00 மணியளவில் கிரிக்கெட் விளையாடி மகிழ்ந்து இருக்கிறார். இந்நிலையில், பேட்ஸ்மேன் வேகமாக அடித்த பந்து காளிதாசன் அந்தரங்க பகுதியை பலமாக தாக்கியது. இதனால் சிறுவன் நிலைகுலைந்து விழுந்துள்ளான். Mother Killed Son: போதையில் தாயை அனுதினமும் சித்ரவதைபடுத்திய மகன்; ஆவேசத்தில் காளியாக மாறிய தாயால், காலியான இளைஞர்.!
உறுதி செய்யப்பட்ட சிறுவனின் மரணம்: சிறுவனை மீட்ட நண்பர்கள் மற்றும் விளையாட்டு மைதானத்தில் இருந்த நபர்கள், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். அங்கு சிறுவனின் மரணம் உறுதி செய்யப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த பெற்றோர், மகனின் உடலை பார்த்து கதறியழுதனர். சிறுவனின் குடும்பம் 40 பேர் கொண்ட கூட்டுக்குடும்பம் என்பதால், பலரும் மருத்துவமனை வாசலில் திரண்டுபோயினர்.
சோகத்தில் குடும்பத்தினர் & நண்பர்கள்: இந்த மரணம் தொடர்பாக மே 4ம் தேதி லோஹிகன் காவல் நிலையத்தில் புகார் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. சிறுவன் காளிதாஸ் குறித்து அவரின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தெரிவிக்கையில், "காளிதாஸ் 6ம் வகுப்பு படித்து வந்தாலும், அவர் விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகம் வைத்திருந்தார். மல்யுத்த வீரராக முடிவெடுத்து, அதற்கான பயிற்சியும் எடுத்து வந்தார். அவரின் மரணம் வருத்தத்தை தருகிறது" என கூறினர்.