Cricket Updates: சூர்ய குமார் இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை – மும்பை அணிக்கு பெரும் பின்னடைவு..!
மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள சூர்ய குமார் யாதவ் தனது முதல் ஆட்டத்தில் விளையாடமாட்டார்.
மார்ச் 20, மும்பை (Cricket News): இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஆன சூர்ய குமார் யாதவ், வருகின்ற ஐ.பி.எல் (IPL 2024) சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளார். இவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை செய்த பின் கடந்த 3 மாதங்களாக எந்த வித போட்டிகளிலும் அவர் விளையாடவில்லை. இதனால், அவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தொடர்ந்து பயிற்சி பெற்று வருகிறார். முழு உடல்தகுதியை இன்னும் அவரால் முழுவதுமாக மீட்டெடுக்க முடியவில்லை. மேலும், முழு உடல் தகுதியை எட்டி விட்டதற்கான சான்றிதழையும் இன்னும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் மருத்துவ குழு வழங்கவில்லை. எனவே, அவருக்கு மறுபடியும் உடல் தகுதி பரிசோதனை நாளை நடத்தப்பட இருக்கிறது. Gang Rape: 4 பேர் கும்பலால் அக்கா-தங்கை கூட்டு பாலியல் பலாத்காரம்: விருதுநகரில் அதிரவைக்கும் பயங்கரம்..!
இதன்காரணமாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக இவர் பங்கேற்கமாட்டார் என தெரியவந்துள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இதயம் நொருங்கியவாறு உள்ள எமோஜியை பதிவிட்டுள்ளார். மேலும், நாளை நடைபெறும் உடல் தகுதி சோதனையிலும் அவர் தோல்வியுறும் பட்சத்தில், மும்பை அணிக்கு இவர் இல்லாதது பெரும் பின்னடைவாகவே இருக்கக்கூடும்.