IND Vs USA: நின்று ஆடிய சூரியகுமார் - சிவம் ஜோடி.. அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அசத்தல் வெற்றி.!
இறுதியில் நின்று ஆடிய சூர்யா - சிவம் ஜோடியால் அணி எளிதில் வெற்றி அடைந்தது.
ஜூன் 13, நியூயார்க் (Sports News): அமெரிக்காவில் உள்ள நியூயார்க், நாசு (Nassu Cricket Stadium) கிரிக்கெட் மைதானத்தில் நேற்று ஐசிசி ஆண்கள் T20 உலகக் கோப்பை 2024 (T20 WORLD CUP 2024) போட்டித்தொடரின் 25வது ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் நேற்று இரவு 08:00 மணியளவில் இந்திய நேரப்படி இந்தியா - அமெரிக்க (IND Vs USA T20 Worldcup) அணிகள் மோதிக்கொண்டன. ஆட்டத்தின் தொடக்கத்தில் பேட்டிங் செய்த அமெரிக்க அணி சார்பில் விளையாடிய வீரர்கள், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழந்து 110 ரன்கள் எடுத்திருந்தனர். அந்த அணியின் சார்பில் விளையாடியவர்களில், ஸ்டீவன் 30 பந்துகளில் 24 ரன்னும், நிதிஷ்குமார் 23 பந்துகளில் 27 ரன்னும் அதிகபட்சமாக அடித்திருந்தனர். பிற எஞ்சிய வீரர்கள் அனைவரும் சொற்பரன்களில் அடுத்தடுத்து வெளியேறியதால், அணியின் ஸ்கோர் என்பது 110 என்ற நிலையிலேயே இருந்தது. US President Son Convicted: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் "குற்றவாளி"; 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்.. கலக்கத்தில் அதிபர் குடும்பம்..!
அடுத்தடுத்து 2 விக்கெட் சரிவால் பதறிய ரசிகர்கள்:
இதனையடுத்து, மறுமுனையில் 111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக் ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா (Rohit Sharma) மற்றும் விராட் கோலி (Virat Kohli) ஆகியோர் முதல் மூன்று ஓவருக்குள் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டை இழந்து வெளியேறினர். இதில் விராட் கோலி ஒரே ஒரு பந்தை பிடித்து, கேட்ச் அவுட் ஆகி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து, களத்தில் நின்று ஆடிய ரிஷப் பண்ட் 20 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து அலிகானின் பந்தில் போர்டு அவுட் ஆகி வெளியேறினார். பின் சூரியகுமார் யாதவ் - சிவம் ட்யூப் ஜோடி களத்தில் நின்று ஆடி, அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தது.
இந்திய அணி அசத்தல் வெற்றி:
சூர்ய குமார் யாதவ் 49 பந்துகளில் 50 ரன்கள் அடித்து அசத்து இருந்தார். சிவம் 35 பந்துகளில் 31 ரன்கள் அடித்திருந்தார். ஆட்டத்தில் முடிவில் 18.2 ஓவரில் இந்தியா தனது இலக்கான 111 ரன்களை எட்டியதைத்தொடர்ந்து, அணி வெற்றி பெற்றது. நேற்றைய ஆட்டத்தின் நாயகனாக இந்திய அணியின் சார்பில் விளையாடிய அர்ஷ்தீப் சிங் தேர்வு செய்யப்பட்டார். இவர் தான் வீசிய நான்கு ஓவரில், எதிரணியை 9 ரன்கள் மட்டுமே அடிக்க இடம்கொடுத்தார். மேலும், நான்கு விக்கெட்டையும் கைப்பற்றி அசத்தியிருந்தார். Controversial Goal: அம்பயரின் தவறான முடிவால் இந்திய அணி தோல்வி; சர்ச்சைக்குரிய கோல் அடித்து கத்தார் அணி வெற்றி..!
முதற்படி எடுத்து வைத்த இந்தியா:
இந்தப் போட்டியின் வெற்றி வாயிலாக இந்திய அணி அடுத்த சுற்று தேர்வாகியுள்ள நிலையில், உலகக்கோப்பைக்கான முதல் படியை இந்தியா எடுத்து வைத்துள்ளது. அடுத்தடுத்து நடைபெறும் ஆட்டங்களில் வெற்றி பெற்று, இந்தியா உலகக்கோப்பையை இந்த ஆண்டு இந்தியாவிற்கு கொண்டுவரும் என்ற எதிர்பார்ப்புடன் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.