KKR Vs RR: சதத்தை நெருங்கி மாஸ் காட்டிய குயின்டன்; கொல்கத்தா அணி முதல் வெற்றி.. ராஜஸ்தான் படுதோல்வி.!
இரண்டு போட்டியிலும் அடுத்தடுத்து தோல்வியை தழுவிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்தில் இருக்கிறது. கிரிக்கெட் தொடர்பான அப்டேட்களை லேட்டஸ்ட்லி தமிழ் (LatestLY Tamil) பக்கத்தில் காணலாம்.

மார்ச் 26, கவுகாத்தி (Sports News): டாடா ஐபிஎல் 2025 (TATA IPL 2025) கிரிக்கெட் தொடரில், இன்று இரவு 07:30 மணியளவில், கௌகாத்தியில் உள்ள பரஸ்பரா கிரிக்கெட் மைதானத்தில் (ACA Stadium, Guwahati), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் (Kolkata Knight Riders Vs Rajathan Royals) அணிகள் மோதிக்கொண்டன. கேகேஆர் Vs ஆர்ஆர் அணிகள் (KKR Vs RR IPL 2025) மோதிக்கொண்ட ஆட்டத்தில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பௌலிங் தேர்வு செய்தது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. Sanju Samson IPL 2025: பறந்துபோன ஸ்டெம்ப்.. சஞ்சு சாம்சன் விக்கெட் 13 ரன்களுக்கு காலி..!
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்:
ராஜஸ்தான் அணியின் சார்பில் களமிறங்கிய யஜஸ்வி ஜெய்ஷ்வால் (Yashasvi Jaiswal) 24 பந்துகளில் 29 ரன்கள், சஞ்சு சாம்சன் (Sanju Samson) 11 பந்துகளில் 13 ரன்கள், ரியான் பராக் 15 பந்துகளில் 25 ரன்கள், துருவ் ஜூரில் 28 பந்துகளில் 33 ரன்கள் அடித்து இருந்தனர். 20 ஓவர்களில் 9 விக்கெட் இழந்த ராஜஸ்தான் அணி தடுமாறி 151 ரன்கள் சேர்த்தது. கொல்கத்தா அணியின் சார்பில் பந்துவீசிய வீரர்களில் வருண் சக்கரவர்த்தி (Varun Chakaravarthy), மொயீன் அலி (Moeen Ali), ஹர்ஷித் ராணா (Harshit Rana), வைபவ் அரோரா (Vaibhav Arora) ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றி அசத்தி இருந்தனர்.
ராஜஸ்தான் எதிர் கொல்கத்தா (RR Vs KKR IPL 2025):
அதனைத்தொடர்ந்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியின் வீர குயின்டன் டி காக் (Quinto de Kock) 61 பந்துகளில் 97 ரன்கள், அஜிங்கிய ரஹானே (Ajinkya Rahane) 15 பந்துகளில் 18 ரன்கள், ஆங்க்ரிஸ் ரகுவன்ஷி (Angkrish Raghuvanshi) 17 பந்துகளில் 22 ரன்கள் அடித்து அசத்தி இருந்தனர். முடிவில் 17.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்த கொல்கத்தா அணி வெற்றி அடைந்தது. இந்த வெற்றியின் வாயிலாக கொல்கத்தா அணி நடப்பு ஐபிஎல் 2025 சீசனில் முதல் வெற்றியை உறுதி செய்துள்ளது. மேலும், ராஜஸ்தான் அணி அடுத்தடுத்து தொடர்ந்து இரண்டு தோல்வியை எதிர்கொண்டு இருக்கிறது.
தெறிக்கவிட்ட குயின்டன் டி காக்:
வில்போல வளைந்து வெளுத்து வாங்கிய ஆர்ச்சர்:
ஊர்க்குருவி உயரப்பறந்தாலும் பருந்தாகாது:
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)