IND Vs SA: 243 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை தக்கவைத்த இந்திய அணி; அனல்பறந்த பந்துகள்.!

அதேபோல, 243 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்தது.

Virat Kohli (Photo Credit: X)

நவம்பர் 06, கொல்கத்தா (Sports News): கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில், நேற்று இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிக்கொண்ட உலகக் கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக ரோகித் சர்மா 40 பந்துகளில் 24 ரன்னும், ஹில் 23 பந்துகளில் 24 ரன்னும், விராட் கோலி 121 பந்துகளில் 101 ரன்னும், ஜடேஜா 15 பந்துகளில் 21 ரன்னும் நடித்திருந்தார். விராட் கோலி இறுதிவரை ஆட்டம் இழக்காமல் சதத்தை கடந்திருந்தார். Virat Kohli Equals Sachin Record: ஒருநாள் போட்டிகளில் சரித்திர சாதனை படைத்த விராட் கோலி; சச்சினின் சாதனைக்கு ஈடாக பிறந்தநாளில் ருத்ரதாண்டவம்.! 

இதனையடுத்து களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, 27.3 ஓவர் முடிவில், 10 விக்கெட் இழந்து 83 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 16 புள்ளிகளை எட்டி முதலிடத்தை தக்கவைத்துள்ளது.