நவம்பர் 05, கொல்கத்தா (Sports News): ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 (ICC CWC 2023) இந்தியாவில் நடைபெறுகிறது. 10 அணிகள் கலந்துகொள்ளும் 48 ஆட்டங்களில், இன்று இந்தியா - தென்னாபிரிக்கா (IND Vs SA) அணிகளுக்கு இடையேயான 37வது ஆட்டம் நடைபெறுகிறது. ஆட்டத்தின் தொடக்கத்தில் டாஸ் வென்ற இந்திய அணி (Team India), பேட்டிங் தேர்வு செய்தது.
இதனையடுத்து, 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் 327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாபிரிக்க அணி களமிறங்கவுள்ளது. இப்போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களுள் ஒருவரான விராட் கோலி, தனது பிறந்தநாள் அன்று மாபெரும் சரித்திர சாதனை ஒன்றை படைத்துள்ளார். Dog Waiting 4 Months For Died Owner: உயிரிழந்த உரிமையாளருக்காக 4 மாதங்கள் பிணவறை முன் காத்திருக்கும் நாய்; கேரளாவில் நெகிழ்ச்சி சம்பவம்.!
தனது பிறந்தநாளில் நடைபெற்ற போட்டியில், வாழ்நாளில் மறக்க இயலாத சதத்தை விளாசிய விராட் கோலியின் ஒருநாள் போட்டியில் 50 வது சதம் இதுவாகும். அவரின் விடாமுயற்சி இன்னும் பல சாதனைகளை படைக்க உதவும். இன்றைய ஆட்டத்தில் ரோஹித் 24 பந்துகளில் 40 ரன்னும், ஹில் 24 பந்துகளில் 23 ரன்னும், விராட் கோலி 121 பந்துகளில் 101 ரன்னும்,
ஸ்ரேயாஸ் ஐயர் 87 பந்துகளில் 77 ரன்னும், சூரியகுமார் யாதவ் 14 பந்துகளில் 22 ரன்னும், ரவீந்திர ஜடேஜா 15 பந்துகளில் 29 ரன்னும் அடித்திருந்தனர். இந்த ஆட்டத்தில் பந்துவீச்சில் சொதப்பிய தென்னாபிரிக்க அணி, சுமார் 22 அகலப்பந்து உட்பட 26 ரன்கள் இந்திய அணிக்கு கூடுதலாக வழங்கியது.
விளையாட்டு வீரர்கள் ஒருநாள் போட்டியில் சதம் (Century) எண்ணிக்கை:
👉 சனதா ஜெயசூர்யா ஸ்ரீலங்கா (Sanath Jayasuriya, Sri Lanka) - 28
👉 ஹாசிம் அம்லா தென்னாபிரிக்கா (Hashim Amla, South Africa) - 27