Rohan Bopanna Retires: சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்தார் ரோஹன் போபண்ணா.. டென்னிஸ் ரசிகர்கள் சோகம்..!

டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

Rohan Bopanna (Photo Credit: @ViratKoisa_18 X)

ஜூலை 30, பாரிஸ் (Sports News): சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும் (Paris Olympics). 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரீஸ் நகரில் ஜூலை 26 அன்று கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரீஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். Paris Olympics 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024.. இந்திய வீரர்களின் இன்றைய போட்டி.. அடுத்த பதக்கம் யாருக்கு?!

ரோஹன் போபண்ணா ஓய்வு: இந்நிலையில் டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா (Indian tennis player Rohan Bopanna), பிரான்ஸ் அணிக்கு எதிரான 2024 பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் இரட்டையர் போட்டியில் தோல்வியடைந்ததை அடுத்து இந்திய டென்னிஸில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். நடப்பாண்டு ஜனவரியில் ஆஸ்திரேலிய ஓபன் மூலம் தனது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்த போபண்ணா, தனது டென்னிஸ் வாழ்க்கையில் 26 பட்டங்களை வென்றிருக்கிறார். 1996 ஆம் ஆண்டு பிறகு ஒருமுறை கூட இந்தியா டென்னிஸில் பதக்கம் வெல்லவில்லை. இந்த காத்திருப்பை கடந்த 2016ம் ஆண்டு, போபண்ணா மற்றும் சானியா மிர்ஷா ஜோடி, கலப்பு இரட்டையர் பிரிவு போட்டியில் முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த ஜோடி 4வது இடத்தை பிடித்து பதக்க வாய்ப்பை இழந்தது குறிப்பிடத்தக்கது.