ஜூலை 29, பாரிஸ் (Sports News): சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் மிக முக்கியமானது, ஒலிம்பிக்ஸ் போட்டியாகும் (Paris Olympics). 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டிகள், இந்த முறை பாரீஸ் நகரில் ஜூலை 26 அன்று கோலாகலமாக தொடங்கியது. இப்போட்டிகள் ஆகஸ்ட் 11-ம் தேதி வரை 17 நாட்கள் நடைபெறவுள்ளது. பாரீஸில் நடைபெறும் 33வது ஒலிம்பிக்ஸ் போட்டியில் 200 நாடுகளைச் சேர்ந்த 10,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தொடர்ந்து இன்று இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டு பிரிவுகளில் தனிநபர் மற்றும் குழு பிரிவில் பங்கேற்று விளையாட உள்ளனர்.
ஹாக்கி (Hockey): இந்தியா - அர்ஜெண்டினா அணிகள் லீக் சுற்றில் பங்கேற்பு, போட்டி மாலை 4.15 மணிக்கு தொடங்கும். Paris Olympics 2024: முதல் பதக்கத்தை பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் வென்றது இந்தியா; சாதனை செய்த பெண் சிங்கம்.!
பாட்மிண்டன் (Badminton): ஆடவர் இரட்டையர் பிரிவு லீக் சுற்றில் சாட்விக் , ஷிராக் ஜோடி, மகளிர் இரட்டையர் பிரிவில் தனிஷா, அஸ்வினி ஜோடி, ஆடவர் ஒற்றையர் பிரிவில் லக்சயா சென் பங்கேற்பு, போட்டிகள் காலை 8.30 மணிக்கு தொடங்குகின்றன.
டேபிள் டென்னிஸ் (Table Tennis): மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜா அகுலா பங்கேற்பு, காலை 11.30 மணிக்கு போட்டி தொடங்கும்.
வில்வித்தை (Archery): ஆடவர் அணிப் பிரிவில் தருண்தீப், தீரஜ், பிரவீண் பங்கேற்பு, மாலை 6.30 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது.
துப்பாக்கிச் சுடுதல் (Shooting): 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு அணி பிரிவு தகுதிச் சுற்றில் மனு பாகர், சரப்ஜோத் சிங் ஜோடி, ரிதம் சங்க்வான், அர்ஜுன் சிங் சீமா ஜோடி, ஆடவர் டிராப் பிரிவில் பிருத்விராஜ் தொண்டைமான், 10 மீட்டர் மகளிர் ஏர் ரைபிள் பிரிவில் ரமிதா ஜிண்டால், 10 மீட்டர் ஆடவர் ஏர் ரைபிள் பிரிவில் அர்ஜுன் பபுதா பங்கேற்பு, பகல் 12.45 மணிக்கு போட்டிகள் தொடங்கவுள்ளன.