Jonny Bairstow 100: 100-வது டெஸ்டில் களம் காணும் இங்கிலாந்து வீரர் - மனம் திறந்து நெகிழ்ச்சி பேட்டி..!
பல்வேறு சவால்களை கடந்து நாளை தனது 100-ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் களம் காணும் ஜானி பேர்ஸ்டோ.
மார்ச் 06, தர்மசாலா (Sports News): இமாச்சலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் இந்தியா-இங்கிலாந்து (IND Vs ENG Test Series 2024) இடையிலான 5 ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. முதல் 4 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டது. நாளை நடக்கவிருக்கும் போட்டியில் இந்திய வீரர் அஸ்வின் மற்றும் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ ஆகியோரின் 100-வது டெஸ்ட் போட்டியில் களம் இறங்குவது கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. School College Leave: திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலின் மாசித்திருவிழா.. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!
ஜானி பேர்ஸ்டோவின் 100-வது டெஸ்ட்: இது குறித்து ஜானி பேர்ஸ்டோ நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், இது எனக்கு உணர்வுப்பூர்வமான வாரமாக இருக்கும். நான் பல்வேறு சவால்களை கடந்து என்னுடைய 100-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது. கடந்த 50 ஓவர் உலகக்கோப்பையில் தர்மசாலா மைதானத்தின் அவுட்பீல்ட் விமர்சனத்திற்குள்ளானது. ஆனால், இப்போது மைதான பாராமரிப்பார்கள் அவுட்பீல்டை நன்றாக தயார்செய்து இருக்கிறார்கள். அவர்களின் பணி அற்புதம். அவர்களுக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மனம் திறந்து பேசிய ஜானி பேர்ஸ்டோ: தனது 100-வது ஒரு நாள் போட்டியும் இதே மைதானத்தில் தான் விளையாடினேன். தர்மசாலா உலகின் மிக அழகான மைதானம். ஆனால், எனக்கு பிடித்த மைதானம் தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன். ஆண்ட்ரூ ஸ்டிராசின் கடைசி டெஸ்ட் போட்டி (2012 ஆம் ஆண்டு) மற்றும் 2016-ஆம் ஆண்டு கேப்டவுன் டெஸ்டில் நான் சதம் அடித்தது எனக்கும், எனது குடும்பத்திற்கும் ரொம்ப ஸ்பெஷலானது. இதேபோல், நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட், 2022-ஆம் ஆண்டு நடந்த இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளும் எனக்கு பிடித்தமான போட்டிகள் ஆகும். இவ்விரு போட்டிகளும் என் மனதை தொட்டவை என்று ஜானி பேர்ஸ்டோ உருக்கமாக கூறினார்.