ITT Vs SS Highlights: சேலம் அணியை வீழ்த்தி திருப்பூர் அணி அபார வெற்றி; முகமது அலி அசத்தல் பந்துவீச்சு..!

நேற்று நடைபெற்ற 20-வது லீக் போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் அணியை வீழ்த்தி திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றி பெற்று அசத்தியது.

ITT Vs SS Highlights (Photo Credit: @TNPremierLeague X)

ஜூலை 22, கோயம்புத்தூர் (Coimbatore News): தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL 2024) இருபது ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரின் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. அதில், நேற்று நடைபெற்ற 20-வது லீக் போட்டியில் திருப்பூர் தமிழன்ஸ்-சேலம் ஸ்பார்ட்டன்ஸ் (ITT Vs SS) அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. திருப்பூர் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சாத்விக், துஷார் ரஹேஜா ஆகியோர் களமிறங்கினர். Two Students Drowned: நண்பர்களுடன் குளிக்க சென்ற இரு மாணவர்கள் நீரில் மூழ்கி பலி; கதறி அழுத தாய்.. குடும்பத்தினர் சோகம்..!

இவர்கள் இருவரும் அரைசதம் அடித்த நிலையில் சாத்விக் 50 ரன்களிலும், துஷார் 79 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனையடுத்து களமிறங்கியவர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வெளியேறினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்கள் அடித்தது. சேலம் அணி சார்பில் பொய்யாமொழி, குரு சாயி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர், 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய சேலம் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய அபிஷேக் 1 ரன்னிலும் முகமது அத்னான் கான் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகினர். அடுத்து வந்த வீரர்கள் அவுட் ஆகி வெளியேற, தொடர்ந்து ஆடிய ரவி ராஜன் அரைசதம் கடந்தார். இருப்பினும், 20 ஓவர்கள் முடிவில் சேலம் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், 51 ரன்கள் வித்தியாசத்தில் திருப்பூர் தமிழன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதை முகமது அலி பெற்று சென்றார்.